Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுப்பொழிவுடன் ஐசிஎஸ்ஐ .....

ஐசிஎஸ்ஐ என்று அழைக்கப்படும் - Institute of Company Secretaries of India புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் வசதியை கருத்தில் கொண்டு குஜராத்தின் அஹமத் நகர் மற்றும் காந்தி நகர், மஹாராஸ்ட்ராவின் அகோலா, அமராவதி, ராஜஸ்தானின் பீவர் மற்றும் சித்தோர்கர்,  உத்திரப்பிரதேசத்தின் ஜான்சி, ஹரியானாவில் உள்ள பானிபட், ஒடிஸாவில் உள்ள ரூர்கெலா, மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயின் போன்ற இடங்கள் புதிய தேர்வு மையங்களாக நிர்ணயித்திருக்கிறார்கள். வரும் ஜீன் 2015 தேர்விலிருந்து இந்த மையங்கள் செயல்பட இருக்கிறது.
 
நிறுவன செயலர்கள் படிப்பில் நல்ல முறையில் படிக்கும் மாணவர்களுக்கு,  ஐசிஎஸ்ஐ ஸ்டூடன்ட்ஸ் எஜிகேஷன் ஃபண்ட் மூலம் மாதாமாதம் உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது. இந்த  ஐசிஎஸ்ஐ ஸ்டூடன்ட்ஸ் எஜிகேஷன் ஃபண்டிற்கு நன்கொடை வழங்கும் தொகை நிறுவன விதிகள் 2013ன் கீழ் சிஎஸ்ஆர்யில் (Corporate Social Responsibilities) கணக்கிடப்படும்.
 
ஐசிஎஸ்ஐ கால் சென்டர்  ஒன்றை தொடங்கி இருக்கிறாது. இது காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும். (கால் சென்டர் எண்கள் 011-33132333 மற்றும் 011-66204999).
 
புதிய மறு பதிவு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் ஐசிஎஸ்ஐயின் எந்த பாட திட்டத்தில் எக்ஸிக்யூட்டிவ் என்று அழைக்கப்படும் இன்டர்மீடியட் கோர்ஸில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் (டி-னோவோவிற்கு தகுதி பெறாதவர்கள்) தற்போது நேரடியாக இறுதி தேர்வு என்று அழைக்கப்படும் ப்ரொஃபெஸ்ஸனல் ப்ரோகிராமிற்கு விண்ணப்பிக்கலாம்.
 
தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதி ஜீன் மாத தேர்விற்கு ஏப்ரல் 09 ஆம் தேதி வரையும், டிசம்பர் மாத தேர்விற்கு அக்டோபர் 10 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  
 
ஐசிஎஸ்ஐயின் பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. பாடதிட்டங்களுக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் இணையதளத்தில் பிடிஎஃப் மற்றும் இ-புக் என்று தேவைக்கு ஏற்றபடி பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி பதிவேற்றப்பட்டுள்ளது.
 
அவசியமான மற்றும் முக்கியமான தகவல்கள் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலமும், குறுஞ்சசெய்திகள் மூலமும் அனுப்பப்பட இருக்கிறது.
 
ICSI Mobile CS : என்கிற ஆண்டுராயிடு தளத்தில் இயங்கக்கூடிய மொபைல் அப்ளிகேஷனும் ஐசிஎஸ்ஐயால் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மொபைல் ஆப் ஐசிஎஸ்ஐயின் தளத்தை மானவர்களுக்கு எளிதாகவும் சரியாகவும் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ