Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபியோவின் தென்னக பிராந்திய சேர்மேனாக டாக்டர் ஏ.சக்திவேல்....

டாக்டர் ஏ.சக்திவேல் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (ஃபியோ) தென்னக பிராந்தியத்தின் சேர்மேனாக  இன்று (30 மார்ச் 2015) பொறுப்பேற்றிருக்கிறார்.  ஃபியோ,  இந்தியாவின் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு மத்திய வணிக அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. ஃபியோ அமைப்பின் உறுப்பினர்கள் தான் இந்தியாவின் 72% ஏற்றுமதியை செய்கிறார்கள்.
 
ஏ. சக்திவேல் 2008 - 2010 கால கட்டத்தில் ஃபியோவின் பிரெசிடென்டாகவும், 2002 - 2010 கால கட்டத்தில் ஃபியோவின் பிராந்திய சேர்மேனாகவும் மூன்று முறை பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி ஃபியோவின் துணைத் தலைவராகவும் இரண்டு ஆண்டு பதவி வகித்த அனுபவமுள்ளவர்.
 
தற்போது திருப்பூர் ஏற்றுமதி சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
 
கோவை ஐசிசிஐயின் (இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ) தலைவராகவும், அபரல் எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுன்சிலின் சேர்மேனாகவும் பணியாற்றி இருக்கிறார். ஜவுளி மற்றும் பின்னலாடை தொழிற்சாலைகளுக்கு இவர் ஆற்றிய பணி மகத்தானது. 
 
ஏ.சக்திவேல் இந்திய ஏற்றுமதிக்கு செய்த அரும்பணியை கருத்தில் கொண்டு இந்திய அரசால் 2009ல் பத்மஶ்ரீ வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறார். அதோடு இவர் ஜவுளித் துறையை மேம்படுத்தியதை கருத்தில் கொண்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
 
ஏ.சக்திவேல் இந்தியாவின் குறிப்பிடும்படியான பின்னலாடை நிறுவனமான பாப்பி கின்ட்வேர் லிமிடெட்-ன்  சேர்மேனாகவும் பதவி வகித்து வருகிறார். ஆர்கானிக் பருத்தி ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்த நிறுவனம் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close