Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிச்சைகாரர்களூக்கு வங்கி.....

பிச்சைகாரர்களுக்கான வங்கி பீஹாரில் கயா நகரில் நடத்தப்படுகிறது. மா மங்களகெளரி கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் 12 பிச்சைகாரர்களின் யோசனை தான் இந்த வங்கி. இந்த வங்கியில் தற்போது 40 பிச்சைக்காரர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த வங்கிக்கு மேலாளர், தலைவர், பொருளாளர், செயலர் என்று அதிகாரிகளும் இருக்கிறார்கள் அவர்களும் பிச்சைக்காரர்கள் தான்.

இந்த வங்கியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒவ்வொரு வாரத்தின் செவ்வாய் கிழமையும் 20 ரூபாயை டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். இப்படி வாரத்திற்கு மொத்தம் 800 ரூபாய் டெபாசிட் தொகையாக வசூலிக்கப்படுகிறதாம். இந்த் தொகை தங்களுக்கு ஏற்படும் பிரச்னையான காலங்களிலும், எதிகால தேவைகளுகும் (பிச்சை எடுக்க இயலாத போது, விபத்து, பிச்சை குறைவாக கிடைக்கும் போது...) பயன்படுத்த இருக்கிறார்களாம்.

இந்த வங்கியின் மூலம் கடன்களும் கொடுக்கப்படுமாம். இந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் மான்ஜி என்கிற உறுப்பினரின் மகள் மற்றும் சகோதரிக்கு ஏற்பட்ட தீ விபத்துக்கு சிகிச்சை அளிக்க 8,000 ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். கடன் வாங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு வட்டி ஏதும் கிடையாது. அடுத்த மாதத்திலிருந்து 2 - 5 சதவிகிதம் வட்டியாக வசூலிக்கப்படுமாம்.

நாங்கள் சமூகத்தில் ஏழையிலும் ஏழையாக இருக்கிறோம். இன்று எங்களுக்காக ஒரு வங்கி இருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று அந்த வங்கியின் உறுப்பினர்களும் அதிகாரிகளும் புன்னகை பூத்திருக்கின்றனர்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ