Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியை சந்தித்தார் ஜாக் மா!

சீனாவின் மிகப்பெரிய பணக்காரரும், பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். நேற்று டெல்லியில் மோடியை சந்தித்த ஜாக் மா. இந்தியாவில் வர்த்தகம் துவங்கிவது பற்றி பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
 
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ  ட்விட்டர் பக்கத்தில் ஜாக் மாவுடனான சந்திப்பு சிறப்பான சந்திப்பாக அமைந்தது என ட்விட் செய்துள்ளார்.
 
இந்த சந்திப்பு குறித்து அலிபாபா குரூப் செய்துள்ள ட்விட்டில் இந்தியாவில் சிறு தொழில்களுக்கு உதவும் வகையில் அலிபாபா செயல்படும் என்ற பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றதாக கூறியுள்ளது.
 
பிரதமர் மோடியை கடந்த நான்கு மாதங்களில் ஜாக் மா சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே இந்தியாவில் பல கோடி ரூபாய் முதலீடுகளை செய்ய போவதாக ஜாக் மா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொழில் துவங்க ஆர்வம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ