Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள், இறக்கத்தில் முடிவடைந்தது.

 

3.30 மணி நிலவரம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 18.37 புள்ளிகள் குறைந்து  27957.49  புள்ளிகளுக்கு வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  1.30  புள்ளிகள் குறைந்து 8491.00 புள்ளிகளுக்கு வர்த்தகமானது. 

10 கிராம் தங்கத்தின் விலை 75  ரூபாய் குறைந்து  26,195 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 27  ரூபாய் அதிகரித்து  2,990 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 

இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1,588 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,131  நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 113  நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 22  நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 28 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

பிபிசிஎல்              4.12%

டாடா பவர்              3.77%

கெயில்        1.96%

டாடா மோட்டார்ஸ் 2.18%

ரிலையன்ஸ்         2.17%

 

இறக்கப் பங்குகள்

ஓ என் ஜி சி -2.81%

பி என் பி           -2.79%

அல்ட்ரா டெக் சிமெண்ட்-2.25%

டாடா ஸ்டீல்    -1.75%

 

1.30 மணி நிலவரம்

கடந்த வியாழன் அன்று சென்செக்ஸ் 654 புள்ளிகளும், நிஃப்டி 184 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து வர்த்தகமானது. நேற்று மற்றும் இன்றைய வர்த்தகத்தில் சரிந்த புள்ளிகள் அனைத்தும் சரிகட்டப்பட்டு சென்செக்ஸ் 28,124 புள்ளிகளுக்கும், நிஃப்டி 8536 புள்ளிகளுக்கும் வர்த்தகமாகிறது. 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 153.82  புள்ளிகள் அதிகரித்து   28133.42  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 44.85 புள்ளிகள் உயர்ந்து  8537.85 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.55 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 108 ரூபாய் குறைந்து 26,162 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.  கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு நான்கு ரூபாய் அதிகரித்து  3,013 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.58 ரூபாயாக வர்த்தகமாகிறது.

உலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் ஜகர்தா காம்போஸைட் அதிகபட்சமாக 1.22 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. நிக்கி அதிகபட்சமாக 1.06 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாகிறது. 

ஏற்றப் பங்குகள்

பிபிசிஎல்               4.12%

டாடா பவர்               3.77%

டாடா மோட்டார்ஸ் 2.18%

ரிலையன்ஸ் 2.17%

கெயில்         1.96%

 

இறக்கப் பங்குகள்

அல்ட்ரா டெக் சிமெண்ட் -1.46%

என்டிபிசி                          -1.08%

ஜி என்டர்டெயின்மென்ட் -0.95%

இன்ஃபோசிஸ்         -0.90%

 

11.30 மணி நிலவரம்

 மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 72.51  புள்ளிகள் அதிகரித்து   28048.37  புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22.55 புள்ளிகள் உயர்ந்து  8514.85 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.26 சதவிகிதமாக இருக்கிறது.

10 கிராம் தங்கத்தின் விலை 43 ரூபாய் குறைந்து 26,227 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2654 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2481 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.   கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு மூன்று ரூபாய் அதிகரித்து  3,020 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.63 ரூபாயாக வர்த்தகமாகிறது.

வருங்காலத்தில் இந்திய சந்தைகளில் அந்நிய நிகர முதலீட்டாளர்களின் பங்கு குறைய வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்திய சந்தைகள் ஏற்கனவே பல வெளிநாட்டு முதலீட்டாளர்களால் ஓவர்வெயிட் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 2015ஆம் ஆண்டின் இறுதியிலும், 2016ஆம் ஆண்டின் இறுயிலும்  இரண்டு இலக்க வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஏற்றப் பங்குகள்

பிபிசிஎல்                3.80%

டாடா பவர்                3.16%

செஸா ஸ்டெர்லைட் 2.19%

ஹெச் யூ எல்          2.09%

கெயில்           2.08%

 

இறக்கப் பங்குகள்

அல்ட்ரா டெக் சிமெண்ட் -1.61%

என்டிபிசி                  -1.52%

டி சி எஸ்                    -0.88%

லார்சன்             -0.78%

 

 

 10.00 மணி நிலவரம்

 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 67 புள்ளிகள் அதிகரித்து   28043 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 8513 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.25 சதவிகிதமாக இருக்கிறது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 309  ரூபாய் குறைந்து 26,260 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 141 ரூபாய் குறைந்து 3,010 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.63 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக வர்த்தகமாவது, பொதுவாக அமெரிக்க மற்றும் உலக  சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருப்பது போன்றவை இந்திய சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இயில் 444 பங்குகள் விலை அதிகரித்தும், 96 பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.
 
ஏற்றப் பங்குகள்
பிபிசிஎல் 3.40
செஸா ஸ்டெர்லைட் 2.83
டாக்டர் ரெட்டில் லேப்ஸ் 2.34
ஐடியா செல்லுலார் 2.02
டாடா பவர் 2.02
 
இறக்கப் பங்குகள்
அல்ட்ரா டெக் சிமெண்ட் -1.69
என்டிபிசி -1.56
பஜாஜ் ஆட்டோ -1.13
ஐடிசி -0.79
ஜி என்டெர்டெயிண்மென்ட் -0.66

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ