Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகள் சரிந்த நிலையில் முதலீடுகளை ஆரம்பிக்கலாமா?

 ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகள் சரிந்த நிலையில் முதலீடுகளை ஆரம்பிக்கலாமா?

பி.ஷியாம்சுந்தர்,

பங்கு மற்றும் கமாடிட்டி ஆலோசகர்.

ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகள் மிகவும் குறைந்து வர்த்தகமாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல தருணமா இது என்கிற கேள்வி எழுவது இயற்பே! இந்தக் கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம்.

டாடா ஸ்டீல், என்.எம்.டி.சி., செயில், ஜிண்டால் ஸ்டீல் மற்றும் உலோகம் சார்ந்த பங்குகள் அனைத்தும் கடந்த ஒரு வருட குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகி வருகின்றன. 

2014 மார்ச் மாதத்திற்கு பிறகு ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் அதிகரித்து வர்த்தகமானது. அதன் பிறகு, தொடர் சரிவு கண்டு வருகிறது இந்தப் பங்குகள்.   

இந்த சரிவுக்கு என்ன காரணம் என்று பார்த்தால், சர்வதேச மற்றும் உள்நாட்டுக் காரணங்களை சொல்ல முடியும். முதலில் சர்வதேச அளவிலான காரணங்களை பார்ப்போம்.

சர்வதேச அளவிலான காரணங்கள்:

உலக ஸ்டீல் உற்பத்தியில், பாதிக்குமேல் சீனா பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது உள்நாட்டு பயன்பாட்டை குறைத்துக் கொண்டதால் விலை சரிந்தது கடந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு பயன்பாடு குறைந்துள்ளது. இதை அடுத்து, முடிந்த அளவிற்கு அந்த நாடு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்ததால், விலை சர்வதேச அளவில் விலை சரிய ஆரம்பித்தது.

உலகப் பயன்பாடு 2013-ல் 78.4 சதவிகிதத்திலிருந்து 2014-ல் 76.4 சதவிகிதமாகக் குறைந்தது. இதன் எதிரொலியாக, ஸ்டீல் நிறுவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான இரும்புத்தாது விலைகளும் சரிந்துவிட்டது. 

தவிர, மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்தும், பிரேசிலிருந்தும் ஏற்றுமதி செய்யப்படும் இரும்புத் தாதின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனை அடுத்து மிகவும் இரும்புத் தாதுவின் விலை சரிய ஆரம்பித்தது. ஒருவருடத்தில் சுமார் 50 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.  

உள்நாட்டு காரணங்கள்:

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலை குறைந்த ஸ்டீல் மற்றும் நம் நாட்டின் தேவை குறைவு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. 

இந்தியாவில், இரண்டாம் நிலையில் இருக்கின்ற ஸ்டீல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு, நேரடியாக இறக்குமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது, முன்னனி நிறுவனங்ளுக்கு பெரிய சவாலாக இருக்கிறது.  

இது மட்டுமில்லாமல்,ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக குறைந்ததால், இந்த நாடுகள் ஏற்றுமதி செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவில் தற்போது சுரங்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பட்சத்தில், ஒருவேளை, நிறுவனங்கள் இரும்புத்தாது  இறக்குமதி செய்வதை நிறுத்தினால்,சர்வதேச விலைகள், மேலும் சரிவற்கு  வாய்ப்பிருக்கிறது.

 

முதலீடு செய்யலாமா?

ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகளைப் பொருத்தவரை, உடனடியாக ஏற்றத்தை பார்க்க முடியாவிட்டாலும், இரண்டு வருடங்கள் பொறுத்திருந்து இருப்பவர்களுக்கு நிச்சயம் லாபத்தை பார்க்க இயலும்.   

அமெரிக்க டாலர் சரிந்தாலோ, சீனா தனது பயன்பாட்டை அதிகரித்தாலோ, மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். அதுவரையில், இந்த பங்குகளின் விலையில்  பெரிய ஏற்றங்களை பார்க்க இயலாது!


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ