Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாடிக்கையாளர்களை கவர செல்ஃபி ஷூ!

இன்று செல்போன் நிறுவனங்கள் அனைத்துமே செல்ஃபியை தான் வியாபார உத்தியாக பயன்படுத்தி வருகின்றன. பின்புற கேமராவைவிட முன்புற கேமரா அதிக பிக்சல் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்ற. செல்போன் நிறுவனங்கள் தான் இதனை வியாபார உத்தியாக பயன்படுத்துகிறது என்றால் நியூயார்க்கை சேர்ந்த ஒரு ஷூ நிறுவனம் செல்ஃபியை வியாபார உத்தியாக பயன்படுத்தியுள்ளது.
 
பெண்களுக்கான காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் நேற்று முன்தினம் ஒரு புதிய வடிவமைப்பிலான ஷூவை பற்றிய வீடியோவை வெளியிட்டது. இந்த விளம்பரத்தில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஷூவின் முன்புறம் ஒரு உங்களது செல்போனை பொருத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் போனில் செல்ஃப் டைமரை ஆன் செய்துவிட்டு ஷூ அணிந்த கால்களை உயர்த்தி உங்களது செல்ஃபிக்களை படம் பிடிக்கலாம் என்று கூறியுள்ளது.
 
மேலும் இந்த நிறுவனம் கூறியிருக்கும் சிறப்பம்சம் என்னவெனில் செல்ஃபி எடுக்கும் போது ஒரு கை தெரியாது ஆனால் இந்த ஷூவில் எடுக்கும் செல்ஃபியில் இரண்டு கைகளும் தெரியும் என்று கூறப்படுகிறது.
 
 
இந்த வீடியோவை யூ-ட்யூபில் பார்த்தவர்கள் சில இது முட்டாள்கள் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ள ஏமாற்று அறிவிப்பு என கருத்து தெரிவிக்க இந்த ஷூவை தயாரித்த நிறுவனம் இது உண்மைதான் என பதிலளித்துள்ளது.
 
கைகளை நீட்டி, ஸ்டிக்கை பயன்படுத்தி எடுத்த செல்ஃபி இப்போது கால்கள் மூலம் எடுக்கும் அளவுக்கு மாறிவிட்டது.
 
இந்த செல்ஃபி ஷூ குறித்த வித்தியாசமான விளம்பர வீடியோ:
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ