Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

 பெட்ரோல், டீசல் விலையை சிறிதளவே எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

 

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 காசு குறைந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21 குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் வரிவிதிப்புக்கு ஏற்ப விலை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ