Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் தெருவுக்குள் பேக் மேன்(PAC-MAN) கேம் ஆடலாம்: கூகுள்

நீங்கள் அனைவருமே கணினியில் பிரபலமான கேம்மான பேக் மேன் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஒரு பாதை நிறைய புள்ளிகளை பெறுவதற்கான டாட்கள் இருக்கும் அதோடு சேர்ந்து உங்களை அழிக்கும் உருவமும் அதில் நடந்து கொண்டிருக்கும் சாலைகளின் வழியே ஓடி அனைத்து டாட்களையும் சேகரிக்க வேண்டும். இதற்கிடையே உங்களை அழிக்கும் உருவத்திடம் சிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் கேம்.
 
இந்த கேமை ஏதோ ஒரு சாலையில் தான் ஆடி வந்தோம். ஆனால் நீங்கள் பயணிக்கும், உங்கள் வீடு இருக்கும் சாலையில் விளையாட முடியும் என்றால் நம்புவீர்களா? முடியும் என்கிறது கூகுள். கூகுள் மேப்ஸை ஓப்பன் செய்து அதில் உங்கள் தெருவை அடையாளப்படுத்தி அருகில் இருக்கும் பேக் மேன் கேம் புகைப்படத்தை க்ளிக் செய்தால் உடனடியாக உங்கள் திரையில் உங்கள் தெரு விளையாடும் களமாக மாறி உங்கள் விளையாட்டு துவங்குகிறது. இதனை கூகுள் அறிமுகப்படுத்தி இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
இதனை பயன்படுத்திய சிலர் நான் சென்னை மவுண்ட் ரோட்டில் ஓடி கொண்டிருக்கிறேன். திருவல்லிக்கேணி சந்துகளில் அதிகமான புள்ளிகள் கிடைக்கின்றன என்று சமூக வலைதளங்களில் தங்கள் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ