Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்

நாணயம் விகடன் - ட்விட்டர் கேள்வி பதில் நேரம்

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி - பதில் நேரத்தில் தற்போது நாணயம் விகடன் ட்விட்டர் பக்கத்தில் நேரடியாக பதிலளித்து கொண்டிருக்கிறார் இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரன்.

உங்களது கேள்விகளை உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan <உங்களது கேள்வி>  #AskNV என ட்விட் செய்யுங்கள்!

 

 


  1. எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் ஆண்டுக்கு ரூ.60,000 வீதம் 3 ஆண்டுகள் பிரீமியம் கட்டி இருக்கிறேன். இந்த பாலிசியை ஐந்து ஆண்டு கழித்து சரண்டர் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்?

ஜீவன் ஆனந்த் பாலிசி ஒரு எண்டொமென்ட் பாலிசி ஆகும். நீங்கள் 3 வருடம் பிரீமியம் கட்டி இருப்பதால், இதனை சரண்டர் செய்தால், நீங்கள் கட்டிய பிரீமியத்தில் 30 சதவிகித தொகை வரையே கிடைக்கும். ஆகவே, இதனை சரண்டர் செய்யாமல் தொடருவதே உத்தமம். அல்லது, இந்த பாலிசியின் பிரிமியம் கட்டாமல், அதனை பெய்ட்அப் பாலிசியாக மாற்றிவிட்டு, முதிர்வுத்தொகையை பாலிசி முடியும் தருவாயில் எடுத்துக்கொள்ளலாம்.

  1. எது சிறந்த ஆன்லைன் டேர்ம் பிளான்?

 

டேர்ம் பிளானை பொறுத்தவரையில் இன்ஷூரன்ஸ் கம்பனியின் நிர்வாகத்திறன், க்ளைம் செட்டில்மென்ட், வாடிக்கையாளர் சேவை மற்றும் பிரீமிய தொகையைப் பொறுத்து தேர்வு செய்யவேண்டும். இவை அனைத்தையும் நினைவில் கொண்டு பார்க்கையில், ஹெச்.டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ டேர்ம் பிளான் எடுப்பது நல்லது.

  1. என்   வயது 35. ஆண்டு சம்பளம் 3 லட்சம் ரூபாய். நான் எவ்வளவு தொகைக்கு ஆயுள் காப்பீடு  எடுக்க வேண்டும்?

ஒரு ஆயுள் காப்பீட்டுத்தொகையை தேர்வு செய்ய, உங்களின் வருமானம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களின் ஆண்டு வருமானத்தில் 10 முதல் 20 மடங்கு தொகையை காப்பீட்டுத்தொகையாக எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது..

  1. என் வயது 46. நான் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பிளான் எடுக்க திட்டமிட்டுள்ளேன். . பாலிசி எடுக்க நான் என்னென்ன ஆவணங்களை கொடுக்க வேண்டும்

ஒரு டேர்ம் பிளான் எடுக்க, கீழ்க்கண்ட ஆவணங்களை கொடுக்கவேண்டும்.

1. முகவரி சான்று

2. வருமானச் சான்று.

3. வயது சான்று

4. கடந்த மூன்று ஆண்டு கால வருமான வரி கட்டிய சான்றிதழ்

4.. உடல் நலம்

5.பிரீமியத் தொகை

6 .பிரத்தேயக குறிப்பு இருந்தால்


வருமான வரி பிரிவு 80C கீழ் ரூ. 1.5 லட்சம், 80D கீழ் ரூ. 25,000. இவற்றை எப்படி முழுமையாக பயன்படுத்திக் கொள்வது?
 
வருமான வரிக்காக மட்டும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது  தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், 80 முதலீட்டைகீழ்க்கண்ட விதமாக செய்யலாம். 

 
80 C முதலீடுகள்(1.5 லட்சம்) ரூ.   
பிஃப் 15000   
பிபிஃப் 20000   
டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் 15000   
டாக்ஸ்மியூச்சுவல் ஃபண்டுகள் 100000   
மொத்தம் 150000  
இந்த முதலீடுகள்,  ஒவ்வொருவருடைய  வயது, மற்றும் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப்  பொறுத்து  பி.பிஎஃப் அல்லது  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஆயுள் காப்பீடு பாலிசியை அரசு அல்லது தனியார் நிறுவனம். எதில் எடுப்பது பாதுகாப்பானது?

ஆயுள் காப்பீட்டைப் பொறுத்த வரை, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதே மிகவும் நல்லது.  டேர்ம் பிளானை பொருத்த வரை இன்ஷூரன்ஸ் கம்பனியின் நிர்வாகத் திறன், க்ளைம் செட்டில்மென்ட், வாடிக்கையாளர் சேவை மற்றும் பிரீமியம் தொகையைப் பொறுத்து தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனமும், பொதுவாக, ரீ-இன்ஷுரன்ஸ் நிறுவனத்திடம் சென்று மறுகாப்பீடு செய்திருப்பதால், அரசு அல்லது தனியார் நிறுவனம் என்ற கேள்விக்கு இடமில்லை.

 

 பாரம்பரிய பாலிசிகளில் (எண்டொமென்ட், மணி பேக், பென்சன்)) ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

 
எண்டொமென்ட் பிளான் என்பது, இன்ஷூரன்ஸ் மற்றும் முதலீடு இரண்டும் கலந்தது என்பதால், அனைத்து பாரம்பரிய பாலிசிகளின் வருமானம் என்பது 4% முதல் 6% வரை மட்டுமே இருக்கும்.


டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பாரம்பரிய பாலிசி எது பெஸ்ட்?
 
டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எடுப்பதுதான் சிறந்தது. உதாரணத்துக்கு, ஒருவரின் வயது தோராயமாக 30 ஆக இருக்குமானல் 50 லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் எடுத்தால், 30 ஆண்டுகளுக்கு பிரீமியம் கட்டுவதாக இருந்தால் எண்டோவ்மென்ட் பாலிசி என்றால் ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.2.5 லட்சம் இருக்கும்.
 
இதுவே டேர்ம் பிளான் என்றால் ரூ. 10,000தான்.  எண்டோவ்மென்ட் பாலிசி முடிவில் ரூ. 1.22 கோடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
 
இதுவே டேர்ம் பிளான் (பிரீமியம் ஆண்டுக்கு ரூ. 10,000) எடுத்துவிட்டு மீதி ரூ. 2.4 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்திருந்தால் ரூ. 6.4 கோடி கிடைக்க கூடும்.  (மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஆண்டுக்கு 12% வருமானம் எடுக்கப்பட்டிருக்கிறது.


என் வயது 30. எல்ஐசியின் இ டேர்ம் பிளான் எடுப்பது நல்லதா?
 

இதர நிறுவனங்களின் பாலிசியுடன் ஒப்பீடும் போது, எல்ஐசியின் இந்த பாலிசியில் பிரீமியம் அதிகம். எல்ஐசியில் இ டேர்ம் பிளான் இப்போதுதான் வந்திருப்பதால் அதன் க்ளெய்ம் விகிதம் என்பது தெரியாது. ஆகவே, இதை தவிர்ப்பது நல்லது.


பென்சன் சார்ந்த இன்ஷூரன்ஸ் பிளான் ஏதாவது இருக்கிறதா?

பென்சன் சார்ந்த இன்ஷூரன்ஸ் பிளான்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. ஆனாலும், இவை அனைத்தும் எண்டோவ்மென்ட் திட்டங்களாக இருப்பதால், அவை நம் ஓய்வூகால செலவுகளை ஈடு செய்யுமா என்பது பெரிய கேள்வி குறியாகவே உள்ளது. இந்த பென்சன் பிளான்களில் ஆண்டுக்கு 6% வருமானம் கிடைத்தாலே பெரிது, பணவீக்க விகிதத்தை கணக்கில் கொண்டால், உங்களின் பணம் பெருகியதாக கொள்ள முடியாது. 

என் வயது 25. நான் ஏன் ஆயுள் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்? பாலிசி எனக்கு மட்டுமே எடுக்க வேண்டுமா? குடும்பத்துக்கும் எடுக்க வேண்டுமா?
 
பொதுவாக, வருமானம் ஈட்டும் நபருக்கு ஆயுள் ஈடுகாப்பீடு என்பது மிகவும் அவசியம். இளம் வயதில் டேர்ம் பாலிசி எடுக்கும் போது பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். உங்களுக்கும் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. 

சைல்டு இன்ஷூரன்ஸ் அவசியம் எடுக்க வேண்டுமா?
 
குழந்தைகள் பெயரில் இன்ஷூரன்ஸ் எடுப்பது தேவை இல்லாத ஒன்று. அவர்களின் எதிர்கால தேவையை ஈடு செய்ய வேறு பல்வேறு முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close