Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015-20: புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை!

வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2015-20-ம் ஆண்டுக்கான புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வெளியிட்டார். இதில், சிக்கலான முந்தைய சட்டதிட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டு, எளிமையான இரண்டு திட்டங்கள் உட்பட, பல கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எம்.இ.ஐ.எஸ்., எனப்படும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் எஸ்.ஐ.இ.எஸ்., எனப்படும், வெளிநாடுகளுக்கு சேவைகள் ஏற்றுமதி திட்டங்களுக்கான அமைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


அதுமட்டுமில்லாமல் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்கான ஏற்றுமதியை வரும் 2020-ம் ஆண்டுக்குள் 9 ஆயிரம் கோடி  டாலர்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு அதிக சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை  ஒருங்கிணைத்து கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், "உலக வர்த்தக அமைப்பின் நிர்ப்பந்தங்களால், ஏற்றுமதிக்கு வழங்கப்படும் மானியங்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  இத்தகைய சூழ்நிலையில், நம் உள்நாட்டு தயாரிப்பு, சர்வதேச போட்டியை எதிர்கொள்ளும் அளவுக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த, இ.பி.சி.ஜி., எனப்படும், முதலீட்டுப் பொருட்கள் ஏற்றுமதி திட்ட ஊக்குவிப்பு, 25 சதவிதமாக குறைக்கப்பட வேண்டியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி அபிவிருத்திக்காகவும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த முறை பின்பற்றப்பட உள்ளது" என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ