Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரகுராம் ராஜனை பாராட்டிய மோடி!

மும்பையில் நடைபெற்றுவரும் அனைவருக்கும் நிதிசேவையை கொண்டு சேர்க்கும் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி. இந்தியாவில் அனைவருக்கும் நிதி சார்ந்த சேவைகளை கொண்டு சேர்ப்பதில் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனும், அவரது குழுவும் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 
ரகுராம் ராஜனின் வளைந்து கொடுக்காத தன்மையும், அவரது கண்டிப்பான அணுகுமுறையும் ஆர்பிஐயின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. இவரது காலத்தில் இந்திய பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது என்று மோடி ரகுராம் ராஜனை பாராட்டியுள்ளார்.
 
ஏற்கெனவே ரகுராம் ராஜனுக்கும், மோடிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன என கூறப்பட்டுவந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தில் குறைகள் உள்ளதையும் முதலில் மேக் ஃபார் இந்தியா என்ற இலக்கில் செயல்பட வேண்டும் என்பதையும் அழுத்தி சொன்னவர் ரகுராம் ராஜன். 
 
மேலும் பலமுரை வட்டிவிகிதத்தை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியும் பணவீக்கம் குறையாமல் வட்டிவிகிதத்தை குறைக்கமாட்டேன் என்றவர் ராஜன். இந்நிலையில் மோடி ராஜனை புகழ்ந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.விழாவில் மோடி ரகுராம் ராஜனுக்கு நினைவு பரிசினை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close