Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.5000 கோடிக்கு இன்ஃப்ரா பாண்டுகளை வாங்க எல்.ஐ.சி. முடிவு!

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. 5,000 கோடி ரூபாய் மதிப்பில் இன்ஃப்ரா பாண்டுகளை வாங்கி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி. வங்கியும் ஐசிஐசிஐ வங்கியும் சுமார் 5,000 கோடி ரூபாய்க்கு இன்ஃப்ரா பாண்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது.

 
இதில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஏறக்குறைய 3,000 கோடி ரூபாய் அளவுக்கு இன்ஃப்ரா பாண்டுகளை வெளியிடுகிறது. 10 ஆண்டு கால ஆயுள் கொண்ட இந்த பாண்டுகளை எல்.ஐ.சி. நிறுவனம் வாங்குவதன் மூலம் அதற்கு 8.45 சதவிகிதம் வருமானம் கிடைக்கும்.
 
எல்.ஐ.சி. நிறுவனம் ஏறக்குறைய 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இன்ஃப்ரா பாண்டுகளை வெளியிட உள்ளது. 10 ஆண்டு கால ஆயுட்காலம் கொண்ட இந்த பாண்டுக்கும் 8.45 வட்டி கிடைக்கும். ஐசிஐசிஐ நிறுவனம் வெளியிடும் பாண்டுகளில் 2,000 கோடி ரூபாயை எல்.ஐ.சி.யும் மீதமுள்ள 500 கோடி ரூபாயை தனியார் முதலீட்டு நிறுவனங்களும் வாங்குகின்றன.
 
ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற அரசு நிறுவனங்கள் வெளியிடும் பாண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட ஹெச்.டி.எப்ஃ.சி. மற்றும் ஐசிஐசிஐ நிறுவனங்கள் தற்போது வெளியிட்டிருக்கும் இன்ஃப்ரா பாண்டுகளுக்கு 15 அடிப்படைப் புள்ளிகள் கூடுதலாக வருமானம் தரும்படியாக இருக்கிறது. 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ