Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஐடி பல்கலைகழகத்தில் பி.டெக். நுழைவுத்தேர்வு!

நடப்பு 2015-16-ம் ஆண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு வருகிற எட்டாம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை (ஏப்ரல் 8 முதல் 19 வரை) நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய நாட்டின் 31 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் (துபாய் மற்றும் குவைத் நாடுகளில்) உள்ள 112 நகரங்களில் 34 தேர்வு மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. பி.டெக். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், கெமிக்கல் உள்ளிட்ட 15 பொறியியல் பட்டப்படிப்பிலும் சென்னை வளாகத்தில் பி.டெக். சிவில் மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், இசிஇ ஆகிய பட்டபடிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வாகும் என்பதை விஐடி பலகலைகழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்காக முன்னதாக பதிவு செய்திருந்த 1,95,302 மாணவர்கள் இந்த தேர்வு மையங்களை பயன்படுத்தி நுழைவுத்தேர்வை எழுத இருக்கிறார்கள். இவர்களில் 1,56,249 பேர் மாணவர்கள், 39,053 பேர் மாணவிகள்.  தேர்வு நாட்களில் காலை 9 மணி முதல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 12.30 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் நுழைவுத்தேர்வு நடக்கும் என்பதும், தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்பது தகவல்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ