Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னணியில் 50 இடங்கள்... அதில் மூன்று சென்னை ஏரியா!

இந்திய அளவில் வீடுகள் விற்பனை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, மக்கான் டாட் காம் (www.makaan.com) என்கிற ரியல் எஸ்டேட் விற்பனை வலைதளம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் படி இந்திய அளவில் மக்கள் அதிகம் விரும்பும் முதல் 50 இடங்களை பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் சென்னையின் தென் பகுதியைச் சேர்ந்த துரைப்பாக்கம், மேற்கு பகுதியைச் சேர்ந்த போரூர் மற்றும் மற்றொரு தென்பகுதியான பல்லாவரம் ஆகிய மூன்று ஏரியாக்களும் இடம்பெற்றிருக்கின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரூ, குர்கான், நொய்டா, பூனே, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

முன்னணியில் உள்ள 50 இடங்களில் நொய்டா முதல் இடத்தையும், இதற்கு அடுத்தடுத்த இடங்களை மும்பையின் செம்பூர், பாந்த்ரா ஆகிய பகுதிகளும் பிடித்திருக்கின்றன. இப்ப்டியாக ஆறாவது இடத்தில் சென்னையின் துரைப்பாக்கம், போரூர் (28-வது இடம்) மற்றும் 35-வது இடத்தில் பல்லாவரம் ஆகிய ஏரியக்கள் இடம் பிடித்திருக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ