Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட்: நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு 31% அதிகரிப்பு!

கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் இந்தியாவிலுள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை, 2015 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 31% அதிகரித்து ரூ.11.88 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இடையில் பிப்ரவரி மாதத்தில் நிர்வகிக்கும் தொகை ரூ.12.02 லட்சம் கோடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. முடிந்த நிதி ஆண்டில் மட்டும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது. இதில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலம் வந்த முதலீடு ரூ.61,089 கோடியாக உள்ளது.

நிர்வகித்து வரும் சொத்து அடிப்படையில் முதலிடத்தில் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் (ரூ.1.62 லட்சம் கோடி) நிறுவனமும், இரண்டாவது இடத்தில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் (ரூ.1.48 லட்சம் கோடி) நிறுவனமும், இதற்கு அடுத்தடுத்த இடத்தில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (ரூ.1.37 லட்சம் கோடி), பிர்லா சன்லைஃப் (ரூ.1.2 லட்சம் கோடி) மற்றும் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் (ரூ.92,751 கோடி) ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கின்றன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ