Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் இந்திய சந்தைகள்: 11.40 மணி நிலவரம்.

11.40 மணி நிலவரம்:
 
ஏற்றத்தில் ஆரம்பித்த இன்றைய பங்குச்சந்தை தற்போது இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. 11.40 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 50.64 புள்ளிகள் இறங்கி 28453.82 என்கிற நிலஇயில் வர்த்தகமாகி வருகிறது. அது போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி  14.25 புள்ளிகள் இறங்கி 8645.65  என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தற்போதைய நிலியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் 0.19% அதிகரித்தும், பத்து கிராம் தங்கத்தின் விலை 0.16% குறைந்து 26,953 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. எஃப்எம்சிஜி, மெட்டல், ஆயில் அண்ட் கேஸ், ஐடி மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள் ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றதிலும், ஹெல்த்கேர் துறை சார்ந்த பங்குகல் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
10 மணி பங்குச் சந்தை நிலவரம்:
 
இன்றைய நாளின் துவக்கத்தில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 57 புள்ளிகள் அதிகரித்து   28561 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து 8670 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. 
 
10 கிராம் தங்கத்தின் விலை 400  ரூபாய் அதிகரித்து 26,997 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் 217 ரூபாய் அதிகரித்து 3,254 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.31 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
இன்று ஆர்பிஐ கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன் சந்தை அதிகரித்து வர்த்தகமாகிறது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் இதே நிலை தொடரும் என்று கூறப்படுகிறது.  ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸில் மட்டும் 594 பங்குகள் விலை அதிகரித்தும், 135 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. 

ஏற்றப் பங்குகள்:
 
ஹச்சிஎல் டெக் 2.25
பஜாஜ் ஆட்டோ 1.93
டெக் மஹிந்த்ரா 1.84
டிசிஎஸ் 1.40
பாங்க் ஆஃப் பரோடா 1.25
 
இறக்கப் பங்குகள்:
 
ஐடியா செல்லூலார் -1.11
சன் பார்மா -0.97
ஹீரோ மோட்டோ கார்ப் -0.80
டாக்டர் ரெட்டில் லேப்ஸ் -0.77
பிபிசிஎல் -0.73

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close