Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்விக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கிகள் காரணம் சொல்வது கட்டாயம்..!

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் அதற்கான காரணங்களை எழுத்து மூலமாக மனுதாரருக்கு தெரிவிக்கும்படி வலியுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார்.

அதேபோல், கல்விக் கடன் குறித்த குறை தீர்ப்பு முறைகளை அனைவரும்  அறியும் வண்ணம் விளம்பரப்படுத்துவது வங்கிகளுக்கு கட்டாயம் என இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
அதேபோல், கல்விக் கடன் மனுதாரரின் வசிப்பிடம் வங்கி எல்லைக்குள் இல்லை என்பதை காரணம் காட்டி வங்கிகள் கல்வி கடன் மறுப்பது கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், ரூ. 7.50 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு உத்தரவாதம் வழங்கும் திட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. அது வரும் போது, வங்கிகள் வற்புறுத்தி சொத்து ஜாமீன் கேட்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2009 ம் ஆண்டில் கல்வி கடன் நிலுவை தொகை, ரூ. 27,000 கோடி. இது 2010  ம்  ஆண்டில் ரூ.35,850 கோடியாகவும், 2011- ம் ஆண்டில் ரூ.41,340 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ