Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை : ஆர்பிஐ அறிவிப்பு

 வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை : ஆர்பிஐ அறிவிப்பு

 
ஆர்பிஐ அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்பதால் வட்டி விகிதங்களில் சிறிய மாற்றமாவது ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது. அதேபோல் மத்திய அரசும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. ஆனால் ஆர்பிஐ விடாப்பிடியாக பணவீக்கம் குறையும் வரை வட்டி விகிதங்களில் மாற்றமே இருக்காது என உறுதியாக இருந்து வருகிறது.
 
சிஆர்ஆர் தொடர்ந்து மாற்றமின்றி 4 சதவிகிதமாகவும், ரெப்போ ரேட் மாற்றமின்றி 7.5 சதவிகிதமாகவும் தொடரும் என்று அறிவித்துள்ளது. மேலும் பணவீக்கம் 2016ம் ஆண்டு ஜனவரிக்குள் 6 சதவிகிதமாகவும், 2016ம் ஆண்டு மத்தியில் 5 சதவிகிதமாகவும் இருக்கும் என்ற இலக்கை ஆர்பிஐ நிர்ணயித்துள்ளது.
 
ஆர்பிஐ கவர்னரின் உறுதியான நடவடிக்கைகள் ஆர்பிஐயை சிறப்பாக செயல்பட வைக்கின்றன என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆர்பிஐ கவர்னரின் விடாப்பிடியான போக்கு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் விதமாக அமையும் என்று கூறப்படுகிறது.
 
 காலையில் ஏற்றத்தில் வர்த்தகமான பங்குச் சந்தைகள்,  வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை என்பதால் சரியத் துவங்கின.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close