Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியை பற்றி தெரிந்து கொள்ள 600 ரூபாய்!

சுற்றுலா தளத்தில் ஒரு இடத்தை ஒரு பூங்காவை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். அங்கு அந்த இடத்தின் சிறப்பு, அங்கு உள்ள பொருட்களின் வரலாறு கூறப்படும் அதேபோல் தான் குஜராத் மாநில சுற்றுலாத் துறை (TCGL) ஒரு வித்தியாசமான சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த ஊரான மெக்சனாவில் உள்ள வட்நகர் , அவர் டீ விற்ற வத்நகர் ரயில் நிலையம், அவர் படித்த பள்ளி, வழிபட்ட ஹத்கேஷ்வர் ஆலயம்,  

அவருடைய தந்தைக்கு சொந்தமான டீக்கடை, வட்நகர் புத்த தொல்பொருள் தளங்கள்,  ஷர்மிஷ்தா ஏரி (பிரதமர் மோடி முதலையை பிடித்து சிறுவயதில் சாகசம் செய்த பகுதி) என்று நரேந்திர மோடி ஆடிப்பாடி வளர்ந்த இடங்களை சுற்றிப்பார்க்க வைக்கிறது. இதற்கான கட்டணம் ஒரு டிக்கேட்டின் விலை 600 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. 

 வைப்ரண்ட் குஜராத் 2015 மாநாடு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றபோதே இந்த சுற்றுலா தொடங்கிவிட்டது. மேலும் மோடி குறித்து  தெரிந்து  கொள்ள விரும்புபவர்கள் அவருடைய பள்ளி நண்பர்களை சந்தித்து பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். மோடியை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் இருப்பதால் இங்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ