Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 வருட பழைய வாகனங்களுக்குத் தடை

டெல்லி , உத்திரப் பிரதேசம் ஹரியானா போன்ற மாநிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் இயங்கும் டீசல் வாகனங்களையும், 15 வருடங்களுக்கு மேல் இயங்கும் பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாணையம். மீறி பயன்படுத்துவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த அதிரடி உத்தரவால் டெல்லியில் தற்போது 28 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யும் நிலையில் இருக்கிறதாம். ஆனால் இதுவரை 1,110 வாகனங்கள் தான் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதாம்.
 
டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு  வாகனங்கள் வெளியிடும் புகையே முதல் காரணமாகவும், மற்ற நகரங்களை விட மிக அதிக அளவில் இருப்பதாகவும் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.  உலகில் அதிக மாசுபட்ட காற்றுள்ள நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close