Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூக்கத்தில் உங்களை எழுப்பும் ஐஆர்சிடிசி.....

 ரயிலில் பயணிக்கும்  போது இனி கவலை இன்றி உறங்கலாம். இதற்காக ரயில்வே "ட்ரெயின் டெஸ்டினேஷன் அலாரம் கால்" என்கிற வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. நாம் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் உங்களுக்கு ரயில்வே துறையிலிருந்து போன் செய்யப்படும்.

 இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள நம் பிஎன்ஆர் எண், இறங்க வேண்டிய ஸ்டேஷன் விவரம், இறங்கும் ஸ்டேஷனின் எஸ்டிடி கோட் போன்றவைகளை  139 ரயில்வே விசாரனை எண்ணில் கொடுத்து பதிவு செய்து கொண்டால் போதும். இந்த வசதி ஐஆர்சிடிசி மற்றும் பாரத் பிபிஓ இணைந்து செயல்படுத்தி வருகிறது.
 
அதோடு 139 என்கிற ரயில்வே விசாரணை எண் சேவையும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 24/7 சேவை, தத்காள் இருக்கைகள்  இருப்பு எண்ணிக்கை, பயணம் ரத்து செய்வது பணம் ரீஃபண்ட் செய்வது, ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என்கிற சம கால தகவல்கள்,  ரயில் புறப்படும் மற்றும் சேரும் நேரம், பயண சீட்டுகளின் விலை, ரயிலில் பயணம் செய்யும் போது உணவு ஆர்டர் செய்வது போன்றவைகளுக்கு இந்த எண் மூலம் வழிகாட்டப்படும் என்று பல புதிய வசதிகளுடன் தொடங்கப்பட இருக்கிறது. 
 
மு.சா.கெளதமன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ