Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சத்யம் ராமலிங்க ராஜூ உட்பட 9 பேர் குற்றவாளி : சிறப்பு நீதி மன்றம் அறிவிப்பு!

சத்யம் ஊழல் காரணமாக ஜனவரி 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சத்யம் ஐடி நிறுவன நிறுவனர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரோடு ஊழலில் ஈடுபட்ட 9 பேருக்கு சிறப்பு நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
 
இந்த தீர்ப்பில் இவர்கள் அனைவரும் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது, இவர்கள் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிசி பிரிவுகளான 409, 120b, மற்றும் 420 ஆகியவற்றின் படி நிறுவன கணக்குகளில் ஊழல் செய்துள்ளதும் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது
.
 
2009 ஜனவரி 7-ம் தேதி இந்த ஊழல் வெளியே வந்தன. கிட்டதட்ட 7,000 கோடி  அளவுக்கு பொய்க் கணக்கு எழுதி எல்லோரையும் ஏமாற்றி இருப்பதாக தகவல் கேள்விப்பட்டு முதலீட்டாளர்கள் கலங்கிப் போனார்கள். 
 
ரூ.350-க்கு வர்த்தகமான பங்கு ஓரிரு நாட்களில் வெறும் 6 ரூபாய்க்கு வந்தது கண்டு அலறினார்கள்.இந்த  மோசடியால் பங்கு தாரர்கள் மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.பின்னர் இந்த நிறுவனத்தை டெக் மஹிந்த்ரா நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close