Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015 முடிவில்: இ-காமர்ஸ் பிஸினஸ் 16 பில்லியன் டாலரை எட்டும்!

நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் இ-காமர்ஸ் பிஸினஸ் 16 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என அஸோசெம் (ASSOCHAM) மற்றும் டெலாய்ட்டி (Deloitte) நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. 2010-ம் ஆண்டில் இந்தியாவின் இ-காமர்ஸ் பிஸினஸ் 4.4 பில்லியன் டாலராக இருந்தது.  இதே 2014-ம் ஆண்டில் 13.6 பில்லியன் டாலராக வளர்ச்சியடைந்தது. இன்று இ-காமர்ஸ் பிஸினஸை விட எம்-காமர்ஸ் பிஸினஸ் அதிகரித்து வரும் நிலையிலும், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இ-காம்ர்ஸ் பிஸினஸ் 16 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது. இந்த வளர்ச்சியானது இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகளில் அதிக அளவில் இருக்கும் என்றும், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய நாடுகளில் குறைந்து காணபப்டும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ