Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முந்திரி: ஏற்றுமதியை பாதிக்கும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு!

பொதுவாகவே முந்திரியை வெளிநாட்டவர்களே அதிகம் விரும்பி உண்பதால், இந்தியாவிலிருந்து முந்திரி அதிக அளவில் ஏற்றுமதியாகிவந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறியிருப்பது எல்லோரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

காரணம், இந்திய மக்கள் நாளுக்கு நாள் முந்திரியை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அதன் தேவை ஆண்டுக்கு 15% என்கிற அளவில் அதிகரித்து வருகிறது.

உள்நாட்டுத் தேவை அதிகரித்து காணப்படுவதால், இந்திய முந்திரிகளை தொடர்ந்து இறக்குமதி செய்துவரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி பற்றாக்குறை காணப்படுகிறது. இன்றைய நிலையில் இந்தியாவின் முந்திரி தேவை ஆண்டுக்கு இரண்டு லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவில் 1.3 லட்சம் டன்னாகவும், ஐரோப்பாவில் 80,000 டன்னாகவும்தான் இருக்கிறது.

2014-15 ஆண்டுக்கான முந்திரி ஏற்றுமதி மதிப்பு 5,000 கோடி என்கிற என்கிற அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதைவிட குறைவாகவே முந்திரி ஏற்றுமதி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ