Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட்: முதலீடுகளை விற்று பணமாக்கிய தொகை ரூ.1.9 லட்சம் கோடி!

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கடந்த மார்ச் 2015 நிலவரப்படி, 1.9 லட்சம் கோடி மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்டுகளை விற்று பணமாக்கியிருக்கிறார்கள். இதில் லிக்விட் மற்றும் இன்கம் ஃபண்டுகளிலிருந்து வெளியாகியிருக்கும் தொகை அதிகம். இருப்பினும் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்கள் மீதான முதலீடானது சிறப்பான நிலையில் காணப்படுகிறது.

மார்ச் மாதத்தில் மட்டும் ஈக்விட்டி ஃபண்டுகளில் 7,032 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வந்திருக்கிறது. கடந்த 2014-15-ம் ஆண்டின் நிதி ஆண்டில் ஈக்விட்டி ஃபண்ட் திட்டத்தில் செய்திருக்கும் மொத்த முதலீடு 68,000 கோடி ரூபாயாகும் என ஆம்ஃபி அமைப்பு தெரிவித்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close