Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெச்டிஎஃப்சியிலிருந்து புதிய என்எஃப்ஓ

 ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் - பிளான் பி - டைரக்ட் பிளான் என்கிற புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஆர்ஜிஇஎஸ்எஸ் (ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்) திட்டத்தின் கீழ் வரிச் சலுகை பெற முடியும்.

மூன்றாண்டு லாக் இன் பீரியட் கொண்ட இந்த ஃபண்டின்  மேனேஜர் சிரிநிவாஸராவ் ராவுரி.  குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000.  ஏப்ரல் 24 வரை  முதலீடு செய்யலாம்.
 
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும். ஒரு வருடத்துக்கு அதிகபட்சமாக  ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து, அதில் 50% வரிச் சலுகை பெறலாம். மொத்தம் மூன்று ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து வரிச் சலுகை  பெறலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close