Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரூர் வைஸ்யா வங்கியில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு கூட்டம்

வங்கி வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சென்னையின் ரிசர்வ் வங்கி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருவது நாம் எல்லோரும் அறிந்ததே. அந்த வகையில் குறு மற்றும் சிறுதொழில்  செய்பவர்களுக்கான வங்கி சார்ந்த குறைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் சமீபத்தில் கரூரில் உள்ள கரூர் வைஸ்யா பேங்க் மற்றும் ஆர்பிஐ இணைந்து குறைதீர்க்கும் கூட்டம் ஒன்றை நடத்தியது.
 இதில் கரூர் வைஸ்யா பேங்க் சிஇஓ மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.வெங்கட்ராமன், கரூர் தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் கே.ராஜூ, வங்கியின் பொது மேலாளர் வி.துரை மற்றும் மூத்த வங்கி அதிகாரிகள் பலரும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
இந்த குறை தீர்ப்பு கூட்டத்துக்கு தங்களின் நிறை குறைகளை பதிவு செய்வதற்காக வந்திருந்த சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை 200. இந்த கூட்டத்தில் வங்கியின் வட்டி, அரசு மானியங்கள் குறித்து தொழில்முனைவோர்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டன. அவர்களுக்கு மட்டுமல்லாமல் வந்திருந்த ஏற்றுமதியாளர்களுக்கு இருக்கும் வங்கி தொடர்பான சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ