Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது!

இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் நடவடிக்கையானது, கடந்த மார்ச் மாத நிலவரப்படி  9% அதிகரித்திருப்பதாக நவ்கரி டாட் காம் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டி இருக்கிறது. மிக முக்கியமாக, ஐடி மற்றும் பேங்கிங் துறைகளில் இந்த நடவடிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 

 
வேலை அதிகரிப்பில் 17% வளர்ச்சியுடன்  பூனே முதலிடத்திலும், டெல்லி மற்றும் மும்பை ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களையும் பெற்றிருக்கின்றன. சென்னை 6% வளர்ச்சியிலும், கொல்கத்தா 3% வளர்ச்சியிலும் இருந்து வருகின்றன.

அக்கவுன்டிங் அண்ட் ஃபைனான்ஸ், ஐடி, விளம்பரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி முறையே மார்ச் 2015-ம் ஆண்டு நிலவரப்படி 43%, 27% மற்றும் 12 சதவிகிதமாக திகழ்கிறது. அதே போல ஹெச்ஆர் துறையின் வளர்ச்சி 21 சதவிகிதமாக காணப்படுகிறது. 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ