Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 ஸ்டார் ரேட்டிங் : ஏர்டெல் ஜீரோவிலிருந்து விலகியது ஃப்ளிப்கார்ட்

இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக குரல்கள் வலுத்து வரும் நிலையில் ஏற்கெனவே நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக ஏர்டெல் செயல்படுகிறது என்று கூறிவந்த விலையில் ஃப்ளிப்கார்ட்டுடன் இணைந்து ஃப்ளிப்கார்ட்டை ஏர்டெல் ஜீரோ எனும் இலவச ஆப்ஸாக பெறலாம் என அறிவித்திருந்தது.
 
இந்தியா முழுவதும் நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரான பிரச்னை பெரிய அளவில் உருவெடுக்கும் நேரத்தில் ஏர்டெலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் வாங்கி கட்டி கொண்டது மட்டுமின்றி கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒன் ஸ்டார் ரேட்டிங்கை வாடிக்கையாளர்களிடம் வாங்கியது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஃப்ளிப்கார்ட் ஒவ்வோரு வாடிக்கையாளரிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்பும், அவர்களது சிரமத்தையும் தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது. 
 
இந்நிலையில் நெட் நியூட்ராலிட்டிக்காக ஏர்டெல் ஜீரோ திட்டத்திலிருந்து பின் வாங்கி கொள்வதாக ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் ட்ராய் அமைப்பிடம் தங்கள் கருத்துக்களை கூறியுள்ள நிலையில் இந்த பிரச்னை மக்கள் மத்தியில் புரட்சியாக மாறிவருகிறது.
 
நீங்களும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய:  http://bit.ly/WriteToTRAI
 
 
ஃப்ளிப்கார்ட்டுக்கு வாசகர்கள் அளித்த 1 ஸ்டார் ரேட்டிங்:
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ