Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் ட்விட்டரில் ட்ரெண்டான தமிழ்!

இன்று நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கூட ட்ரெண்டிங்கை பார்த்து தான் தெரிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தமிழ் வாழ்க என்ற தமிழ் வார்த்தை இனையதளத்தில் ட்ரெண்டானது. முதல் முறையாக இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் தமிழ் வார்த்தை ஒன்று இடம்பெற்றது.
 
பின்னர் இதேபோல் மற்ற மொழிகளிலும் வார்த்தைகள் ட்ரெண்டிங்கில் கலக்கின. இந்நிலையில் இன்று ட்விட்டரில் #ஒருசொல்கவிதை என்ற வார்த்தை ட்ரெண்டானது. அதுமட்டுமின்றி இந்திய ட்ரெண்டிங்கில் முதல் இடத்தையும் பிடித்தது. பிராந்திய மொழிகளும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பெறும் என்பது. இந்த விஷயத்தில் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்லது.
 
ஒரு வார்த்தையை ஹாஷ்டேக்குடன் பல முறை பல்பேர் ட்விட் செய்யும் போது இந்த ட்ரெண்டிங் உருவாகிறது. இதனை லட்ச கணக்கோனோர் செய்யும் போது அது இந்திய மற்றும் சர்வதே அளவில் ட்ரெண்டாகும். 
 
இந்த ட்ரெண்டிங்கில் அப்படி என்ன தான் சொல்கிரார்கள் என்று பார்த்தால் அம்மா, அப்பா, இந்தியா என்ற வார்த்தைகள் தான் ஒரு சொல்கவிதைகள் என்றும், இன்னும் சிலர் சினிமா, காதல், பணம், தொழில், வெற்றி என்றும் கூறிவருகின்றனர்.மொத்தத்தில் இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தமிழ் வார்த்தையான #ஒருசொல்கவிதை இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ