Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2017-18: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8%!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 7.5 சதவிகிதமாகவும்,  2017-18-ம் நிதி ஆண்டுக்குள் எட்டு சதவிகிதமாகவும் அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. மத்தியில் ஆளும் தற்போதைய அரசு, நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு திட்டமிட்டிருப்பதோடு, சர்வதேச அளவில் சரிந்துவரும் கச்சா எண்ணெய் விலையின் பலன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகாம சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும்,  2016 முதல் 2018 வரையிலான காலத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் வளர்ச்சி 12% அளவுக்கு உயரும் என்று ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதே சமயம் உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய ஆய்வறிக்கையில், இந்தியாவின் ஏற்றுமதித் துறையில் பெருமளவு வளர்ச்சி இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஃபிட்ச் தரச் சான்று நிறுவனம் நம்பகமான கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில், உலக வங்கி ஆய்வறிக்கையும் இவ்விதம் கருத்து தெரிவித்திருப்பது உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

மேலும், பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (The Organisation for Economic Co-operation and Development (OECD)) இந்தியாவின் வளர்ச்சி குறித்து உறுதிபட கருத்து தெரிவித்துள்ளது. இதேபோல ஆசிய மேம்பாட்டு வங்கியும் (Asian Development Bank) நடப்பாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியும் அடுத்த நிதி ஆண்டில் 8.2 சதவீத வளர்ச்சியையும் எட்டும் என தெரிவித்துள்ளது. பிப்ரவரி, 2014-ல் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிட்ட தொகையைக் காட்டிலும்,  கடந்த பிப்ரவரியில் செலவிட்ட தொகை 55 சதவீதம் குறைவாகும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ