Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியும் கெஜ்ரிவாலும்... செல்வாக்கான மனிதர்கள்!

அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் பத்திரிக்கை, தனது வலைதளப் பக்கத்தில் உலகத்தின் செல்வாக்கான மனிதர்களை தேர்ந்தெடுக்கும்படி அதன் வாசர்களை கேட்டிருந்தது. இந்த கருத்துக்கணிப்பில் அமெரிக்காவின் 57% வாசகர்கள் கலந்து கொண்டு, டைம்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டிருந்த 100 பேரிலிருந்து செல்வாக்கான மனிதர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த கருத்துக்கணிப்பின் முடிவை இந்த வாரத்தில் டைம்ஸ் வெளியிட இருக்கும் நிலையில், உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் இடம்பிடித்திருக்கிறார்கள். நரேந்திரமோடிக்கு 0.6% வாக்குகளும், கெஜ்ரிவாலுக்கு 0.5% வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.

முதல் இடத்தை ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் பெற்றிருக்கிறார். செல்வாக்கு மனிதர்கள் தரவரிசையில் லேடி காகா, ஹிலாரி கிளின்டன், மலாலா, ஒபாமா மனைவி மிச்சேல் போன்ற பலர் இடம்பிடித்திருக்கிறார்கள்.  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ