Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மார்ச் 2015: இந்தியாவின் ஏற்றுமதி 21% குறைந்தது!

இந்தியாவிலிருந்து பல பொருட்கள் ஏற்றுமதியாகி வரும் விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. ஏற்றுமதி துறையின் வளச்ர்ச்சியானது அதிகரித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 21% இந்திய ஏற்றுமதியானது குறைந்திருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளான ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் இறக்குமதி தேவைகள் குறைந்து காணப்படுவதுதான். இதன் காரணமாகவே இந்திய ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 30.34 பில்லியன் டாலரிலிருந்து 23.95 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துள்ளது.

அதே போல இந்தியாவின் இறக்குமதியும் 13.44% குறைந்து 35.74 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் தங்கம் இறக்குமதி மட்டும் 4.98 பில்லியன் டாலராக அதிகரித்து காணப்படுகிறது. துறை வாரியாக ஏற்றுமதியைப் பார்க்கும் போது, ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, பெட்ரோலியம் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பொறியியல் சாதனங்கள், எலெக்ட்ரானிக் மற்றும் விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி குறைந்திருப்பதாக இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2014-15-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 1.23% குறைந்து 310.5 இல்லியன் டாலராக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 314.41 பில்லியன் டாலராக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP