Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருத்தி விலை குறைந்தது!

பருத்தியின் ஏற்றுமதி தேவை மற்றும் உள்நாட்டுத் தேவை குறைந்து காணப்பட்டதால், கடந்த வாரத்தில் ஸ்பார்ட் சந்தைகளில் பருத்தி விலையானது குறைந்து வர்த்தகமானது. ஃப்யூச்சர் சந்தைகளிலும் இதே நிலைதான் காணப்பட்டது. குஜராத் சங்கர்-6 வகை காட்டன் 356 கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 33,000-33,500 வரை வர்த்தகமானது.

கடந்த வார வியாழக்கிழமை அன்று குஜராத் சந்தைக்கு 20,000 பொதிகள் (ஒரு பொதி என்பது 170 கிலோ) வரத்து காணப்பட்டது. தேவை குறைவின் காரணமாக கபாஸ் வகை காட்டன் விலையும் குறைந்தே வர்த்தகமானது. அன்றைய தினத்தில் ஏப்ரல் ஃப்யூச்சர்  கான்ட்ராக்ட் (கபாஸ் காட்டன் ) 20 கிலோவுக்கு 806 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது இதற்கு முந்தைய தினத்தை விட 1.29% குறைவாகும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ