Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூகுளின் பிராஜெக்ட் லூன் வேகமெடுத்திருக்கிறது.....

கூகுள் நிறுவனத்தின் ப்ராஜெக்ட் லூன் நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு பலூன் பூமியிலிருந்து 20 கிலோமீட்டர் உயரத்திற்கு  சென்று ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இணைய வசதியை வழங்கும் இது தான் ப்ராஜெக்ட் லூன்.  இந்த திட்டம் தற்போது அதி வேகத்தில் செயல்படத் தொடங்கி இருக்கிறது.

முதலில் இந்த பலூன்களை டேப் செய்ய 3 - 4 நாட்களாயின. இப்போது ஒரு பலூனை சில மணி நேரங்களில் டேப் செய்யத் தொடங்கிவிட்டது கூகுள் நிறுவனம். அதே போல் ஆரம்பத்தில் பலூன்களை மனிதர்களே இயக்கினார்கள் ஆனால் தற்போது ஆட்டோமேட்டிக் கிரேன்கள் மூலம் இயக்கப்படுகிறது.  இதனால் தற்போது நாள் ஒன்றுக்கு 20 பலூன்கள் வரை ஏவ முடியும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
 
தற்போது இந்த பலூன்களை இந்தியாவில் இயக்கி இந்தியாவிலுள்ள இன்டுஇடுக்குகளுக்கு எல்லாம் இணைய வசதி தர, கூகுள் நிறுவனம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது.   முகம்மது கெளதத், கூகுளின் துணைத் தலைவர் (பிஸ்னஸ் இன்னோவேஷன்) 2016ல் உலகின் ஒவ்வொரு சதுர இன்சிலும் இணைய வசதி கிடைக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். இதற்காக தொலைதொடர்பு நிறுவனங்களோடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
 
மு.சா.கெளதமன்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ