Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரி தாக்கல் செய்ய வெளிநாட்டு பயண விவரங்கள் வேண்டும்.....

வருமான வரி தாக்கல் செய்யும் போது இனி வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களையும் குறிப்பிட வேன்டும். அதாவது 2014 -2015 நிதி ஆண்டில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டிருந்தால் 2015 - 2016 ஆம் ஆண்டு வரி தாக்கல் செய்யும் போது பாஸ்போர்ட் எண், எந்தஎந்த நாடுகளுக்கு சென்றுள்ளீர்கள் என்கிற விவரம், எத்தனை முறை சென்றுள்ளீர்கள், எவ்வளவு தொகை செலவு செய்தீர்கள், செலவு செய்த தொகையில் நிறுவனம் கொடுத்த தொகை எவ்வளவு, நீங்கள் சொந்தமாக செய்து கொண்ட செலவுகள் மற்றும் அதன் விவரங்கள், ஏதாவது ஸ்பான்சர் மூலம் சென்றிருந்தால் அதன் விவரங்கள் போன்றவைகளை ஆதாரத்தோடு குறிப்பிட வேன்டும் என்று மத்திய நேரடி வரிக் குழு (CBDT) தெரிவித்திருக்கிறது.

எனவே இனி வெளி நாடுகளுக்கு எந்த காரணத்திற்காக சென்றாலும் மறக்காமல் அதன் விவரங்களையும், ஆதாரங்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ