Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் 74 மடங்கு ஓவர் சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு பங்கை வாங்க 75 பேர் போட்டி போட்டு வாங்க முற்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் தான் பங்கு கிடைத்திருக்கிறது. இது கடந்த எட்டு வருடங்களில் இல்லாத புதிய சாதனை. 

 
விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 117 கோடி ரூபாய் முதலை திரட்ட 1.71 கோடி பங்குகளை, ஒரு பங்குக்கு 195 - 205 ரூபாய் வரை விலை நிர்ணயித்து ஐபிஓவை வெளியிட்டது.  இதில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் மட்டும் 26 மடங்கு ஓவர் சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் அல்லாத ஒதுக்கீடுகளில் 180 மடங்கு ஓவர் சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டிருக்கிறது.  சிறு முதலீட்டாளர்களுக்குகான  ஒதுகீடுகளை  5.23 மடங்கு ஒவர் சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறார்கள்.
 
இந்த நிறுவனம் தற்போது 140 கோடி ரூபாயை வெறும் 68.5 லட்சம் பங்குகளை, ஒரு பங்குக்கு 205 ரூபாய்க்கு 15 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தே முதலை திரட்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP