Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவிற்கு படையெடுக்கும் கேம் நிறுவனங்கள்....

இந்தியாவில் கால் பதிக்க கேம்ஸ் மற்றும் மொபைல் போன் விளம்பர நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.  2016ஆம் ஆண்டு அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா ஸ்மார்ட்போன் உபயோகத்தில் முதலிடத்தை பிடிக்கும் என்று டெக்னாலஜி, கேம்ஸ், மொபைல் போன் விளம்பர நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. 

தற்போது இந்தியாவில் 10 நொடிகளுக்கு ஓடக்கூடிய விளம்பரங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவைகள் அடுத்த சில ஆண்டுகளுக்குள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர், மற்றும் விளம்பர வீடியோக்கள் 25 மடங்கு அதிகரிக்கும் என்பதையும் கணித்திருக்கின்றன.
 
இதனால் உலகில் உள்ள முன்னனி கேம் நிறுவனங்களான ரோவியோ, செப்டோலேப், போஸா ஸ்டுடியோ, ரோட்ஹவுஸ் இன்டராக்டிவ் போன்றவைகள் இந்தியாவின் மீது அதீத  கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.
 
இந்த ஆன்டு இந்தியாவிலிருந்து 1,526 கோடி ரூபாய் கேம்ஸ் நிறுவனங்களுக்கு வருவாயாக கிடைக்கும் என்று நாஸ்காம் கணக்கிட்டிருக்கிறது. உலகில் அதிக கேம்கள் பதிவிறக்கம் செய்யும் நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பதாக ஆப்அன்னி நிறுவனம் பட்டியலிட்டிருக்கிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ