Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக்: சந்தையின் அடுத்த மூவ்!

ஷேர்லக்: சந்தையின் அடுத்த மூவ்!

வெள்ளிக்கிழமை மாலை நாம் சற்று பரபரத்தபடி ஷேர்லக்கின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். வழக்கம் போல தன் புல்லட்டில் படபடவென வந்தவரிடம், ‘‘சந்தை தொடர்ந்து மூன்று தினங்களாக இறங்கி இருக்கிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘ஆம், இன்றைய (வெள்ளிக்கிழமை) வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 224 புள்ளிகள் இறக்கம்கண்டு, 28422-ஆக இறங்கி இருக்கிறது. சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்தில் இருப்பது, கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸ் விலை வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் 3% அதிகரித்து, 63 டாலராக உயர்ந்தது போன்றவை சந்தை இறக்கத்துக்கு காரணங்களாக இருக்கின்றன. அதேநேரத்தில், இந்த இறக்கம் என்பது குறுகிய காலத்துக்கானது தான். அந்த வகையில் இந்த கரெக்‌ஷனைப் பயன்படுத்தி முதலீடு செய்யலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சென்செக்ஸ் 32500 புள்ளிகளுக்கு அதிகரிக்கும் எனப் பெரும்பாலான பங்கு தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன’’ என்றவருக்கு சில்லென்று மில்க் ஷேக் தந்துவிட்டு, ‘‘சந்தையின் அடுத்த மூவ் எப்படி இருக்கும்?’’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

‘‘கடந்த வாரத்தில் சந்தை அதிகமாக இறங்கியிருந்தாலும் பல விஷயங்கள் சந்தை ஏற்றத்துக்குச் சாதகமாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

பொதுத் துறையைச் சேர்ந்த என்எம்டிசி நடப்பு நிதி ஆண்டில் அதன் 15% பங்குகளை விற்பனை செய்தவதன் மூலம் சுமார் ரூ.800 கோடி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் சந்தைகளில் நடப்பு ஆண்டில் ஏப்ரல் 16-ம் தேதி வரைக்கும் எஃப்ஐஐகள் இந்தியாவில்தான் மிக அதிகமாக 634 கோடி டாலர் (சுமார் ரூ.39,308) முதலீடு செய்திருக்கிறார்கள்.

நடப்பு 2015-ம் ஆண்டில் சீனாவைவிட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கி கணித்துள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப் பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் காரணமாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 7.9%,  2016-17-ல் 8.4% ஆக இருக்கும் என தரகு நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி தெரிவித்துள்ளது.

கடந்த 2014-15-ம் ஆண்டில் புதிதாக மொத்தம் 18 லட்சம் டீமேட் கணக்குகள் இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கின்றன. பல முன்னணி நிறுவனங்களில் சிறு முதலீட்டாளர்களின் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்  முதலீட்டுக்காக 30 லட்சம் ஃபோலியோக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் ஈக்விட்டி ஃபண்டுகளில் சுமார் ரூ.70,000 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காலத்தில் இந்திய பங்குச் சந்தை அளித்த வருமானம் சுமார் 30 சதவிகிதமாக உள்ளது. முதல்முறையாக மெட்ரோ உள்ளிட்ட டாப் 15 நகரங்களைவிட இரண்டாம் நிலை நகரங்களில் சிறு முதலீட்டாளர்களின் ஃபோலியோக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அதிகமாக உள்ளது’’ என நீண்ட விளக்கத்தைத் தந்தார்.

‘‘காலாண்டு முடிவுகள் எப்படி வந்துகொண்டிருக்கின்றன?’’ என்று அவரிடம் கேட்டோம்.

மேலும் விவரங்களுக்கு விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ