Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலாவதியான ஓட்டுநர் உரிமம்...விபத்தில் இறந்தால் க்ளெய்ம் கிடைக்குமா?

 மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ள ஒருவர் சாலை விபத்தில் இறந்துவிடுகிறார். அவர் விபத்தில் இறந்தபோது ஓட்டுநர் உரிமம் காலாவதியானதாகவும், அவர் ஒரு வழிப்பாதையில் பயணித்திருக்கிறார் என்று தெரிந்தால் க்ளெய்ம் கிடைக்குமா?

 

ஜி.ரவீந்திரன், திருவண்ணாமலை.

வி.சுப்ரமணியன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்.

‘‘இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ள ஒருவர் சாலை விபத்தில் இறக்கும்போது, அவர் ஓட்டுநர் உரிமம் காலாவதியானது, அவர் ஒருவழிப் பாதையில் பயணித்தி ருந்தது போன்ற காரணங்களை வைத்து இறந்தவருக்கான க்ளெய்மை  மறுக்க முடியாது.

ஓட்டுநர் உரிமத்தைப் பொறுத்த வரை, இரண்டு விஷயங்களால் க்ளெய்ம் கிடைக்காமல் போகும். ஒன்று, ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்திருக்கலாம்; அல்லது இனி உரிமம் பெறத் தகுதியற்றவராக ஆர்.டி.ஓ. அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கலாம். இது மாதிரி இல்லாமல், ஒருவரது ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி இருந்தால்கூட க்ளெய்ம் கிடைக்கும். அதோடு, இறந்தவரால்  விபத்து ஏற்படவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் க்ளெய்ம் கிடைக்கும்.”

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ