Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரப்பர் உற்பத்தி 15% குறைந்தது!

இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தியில் 90% ரப்பர்கள் கேராள மாநிலத்தில்தான் உற்பத்தியாகின்றன. இந்த மாநிலத்தில் 5.45 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் மரங்கள் பயிரிடப்பட்டிருக்கின்றன. ரப்பர் உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில்களில் 11.50 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கேரளாவின் ஆதார தொழிலாக இருக்கும் ரப்பர் உற்பத்தி கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் 15% குறைந்து 6.55 லட்சம் டன்னாக காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டில் 7.74 லட்சம் டன்னாக இருந்தது என ரப்பர் போர்டு தெரிவித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் வர்த்தகச் சந்தையில் இயற்கை ரப்பரின் விலை சரிந்ததால் பெரும்பாலான விவசாயிகள் ரப்பர் உற்பத்தியை குறைத்துவிட்டனர் என்று வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

கடந்த மார்ச், 2015-ல் மட்டும்  ரப்பர் உற்பத்தி 26.6% (35,000 டன்) குறைந்து காணப்பட்டது. இதே 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்  47,700 டன் குறைந்து காணப்பட்டது என ரப்பர் போர்டு தெரிவித்துள்ளது. இயற்கை ரப்பர் உற்பத்தி குறைந்துள்ள அதே சமயம். அதன் தேவை அதிகரித்து காணப்படுகிறது. முக்கியமாக டையர் தயாரிப்பாளர்களின் தேவை முந்தைய நிதி ஆண்டை விட 2014-15-ம் நிதி ஆண்டில் 3.7% அதிகரித்துள்ளது.  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ