Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் பில்லியனர்கள்!

கடந்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தியாவின் பில்லியனர்களின் பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய மாற்றம் 2010-ம் ஆண்டில் 5.55 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் (2005-ல் திலிப் சங்வியின் சொத்து மதிப்பு 1.27 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது) இருந்த சன் பார்மா குழுமத்தின் திலிப் சங்வி 2015-ம் ஆண்டில் 23.12 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்.

2010-ல் 35.13 பில்லியன் டாலர் சொத்துடன் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 2015-ல் சொத்து மதிப்பு குறைந்து 21.76 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து அஸிம் பிரேம்ஜி (10.04 பில்லியன் டாலர்), ஷிவ் நாடர் (13.08 பில்லியன் டாலர்), சுனில் மிட்டல் (11.38 பில்லியன் டாலர்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ