Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டப்ஸ் மேஷ்! இணையத்தை கலக்கும் ஷமிதாப் ஆப்ஸ்!

சமீபத்தில் வெளியான ஷமிதாப் படத்தை பார்த்திருப்பீர்கள். இதில் தனுஷ் வாயில் இருந்து அமிதாப் பச்சன் வாய்ஸ் வரும். இதனை பார்க்க வித்தியாசமாக இருக்கும். இதனை மருத்துவ ரீதியாக செய்ய பல கோடிகள் செலவாகும் .

ஆனால் இதனை ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் செய்யலாம் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும். உங்கள் வாயில் இருந்து ரஜினிகாந்த் தொடங்கி பாரக் ஒபாமா வரை அனைவரது வாய்ஸையும்  கொண்டு வர முடியும் என்றால் நம்புவீர்களா? நம்பி தான் ஆகவேண்டும்.

அதற்காக தான் வந்துள்ளது டப்ஸ் மேஷ் ஆப்ஸ். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த  ஆப்ஸை டவுன்லோட் செய்தால் இதில் நிறைய வாய்ஸ்கள் கொட்டிகிடக்கின்றன. அது தவிர நீங்களே ரெக்கார்ட் செய்தும், உங்கள் போனில் உள்ள சத்தங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.


 பின்னர் திரையில் முன்பக்க கேமரா ஆன் ஆகும் அதில் உங்கள் வாய்ஸுக்கு ஏற்றவாறு உதட்டை அசைத்தால் உங்கள் உதட்டசைவோடு நீங்கள் தேர்ந்தெடுத்த குரல் இணைந்துவிடும். உதாரணமாக ஒபாமாவின் குரலுக்கு நீங்கள் உதட்டை அசைத்தால் உங்கள் வாயில் இருந்து ஒபாமாவின் வாய்ஸ் கேட்கும்.

இதனை நீங்கள் வாட்ஸப் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களிலும் சேர் செய்து கொள்ளும் வசதியை இந்த ஆப்ஸ் வழங்கியுள்ளது. இந்த ஆப்ஸிற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.1 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

ப்ளஸ்:
1.வித்தியாசமான குரல்கள், பிரபலங்களின் குரல்கள் உங்கள் உதட்டசைவில் கேட்கலாம்.
2.இணைப்பு சிறப்பாக உள்ளது.
3.செல்ஃபி பிரியர்களுக்கு உதவும் விதமாக உள்ளது.

மைனஸ்:

1.முன்பக்க கேமரா அவசியம் தேவைப்படுகிறது.
2.ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வேலை செய்கிறது. அதிலும் சில போன்களில் வேலை செய்யவில்லை

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close