Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட்சய திருதியை அன்று அதிகரித்த தங்க விற்பனை...

அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கமும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. நேற்று அட்சய திரிதியையை முன்னிட்டு  தமிழகம் முழுவதும்  ஒரேநாளில் 2 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 400 கிலோ தங்கம் அதிகம் விற்றுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் 30 -35 டன் வரை விற்றிருப்பதாகா அனைத்து இந்திய ஜெல்ஸ் ம்ற்றும் ஜிவல்லரி வர்த்தக சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை தோராயமாக 30,000 ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த வருடம் அதே 10 கிராம் தங்கத்தின் விலை 27,010 ஆக குறைந்திருப்பதால் மக்கள் ஆர்வமுடன் நகைகளை வாங்கியுள்ளதாகவும் வியாபாரிகள் கூறினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.500 கோடிக்கு மேல் நகைகள் விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தங்கத்தின் இறக்குமதி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 93.86% அதிகரித்திருக்கிறது. மார்ச் 2015 நிலவரப்படி 4.98 பில்லியன் டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதே கால கட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி வெறும் 2.57 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தியதால் தான் இந்த அளவிற்கு தங்க இறக்குமதி அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ