Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் முதன்முறையாக சேவைகளுக்கான கண்காட்சி...

உலக சேவை கண்காட்சி (குளோபல் எக்ஸிபிஷன் ஆன் சர்வீசஸ்) இந்தியாவில் நாளை (ஏப்ரல் 23, வியாழன்) தொடங்க இருக்கிறது. இந்த இரண்டு நாள் கண்காட்சிய பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். இந்த கண்காட்சிய அடுத்த வருடம் முதல் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டிருப்பதாக வணிக மற்றும் தொழிற்சாலை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

இந்த இரண்டு நாள் கண்காட்சியில் இந்தியாவின் ஐ.டி, டெலிகாம், சுற்றுலா, ஹெல்த்கேர், லாஜிஸ்டிக்ஸ், கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற சேவைத் துறைகள் தங்கள் திறன்களையும் சேவை தரத்தையும் செயல் விளக்கங்களோடும், புள்ளி விவரங்களோடும் விவரிக்க உள்ளது.
 
இந்த கண்காட்சியில் 39க்கும் மேற்பட்ட முன்னனி உலக நாடுகள் பங்கேற்க உள்ளன.  இந்த கண்காட்சியில் இந்தியாவின் சார்பாக குஜராத், அஸ்ஸாம், பிஹார், கோவா, ஹரியானா, ஜம்மு அண்ட் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஒடிஸா போன்ற மாநிலங்கள் பங்கேற்க உள்ளன. இந்தியா சேவைத்துறையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் அதிவேகமாக வளரும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP