Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாம்பழ விளைச்சல் குறைவு

உத்திரப்பிரதேசத்தில் பருவம் தவறி பெய்த மழையாலும், ஆளங்கட்டி மழையாலும் மாம்பழ உற்பத்தி 50% குறைந்திருக்கிறது.  இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு நான்கு மில்லியன் டன் மாம்பழம் விளைவிக்கபடுகிறது,  தோராயமாக ஒரு மில்லியன் டன் உத்திரப்பிரதேசத்தில் விளைபவையே.  அதே போல் இந்தியாவின் மொத்த மாம்பழ உற்பத்தியில் ஆந்திரம் மற்றும் உத்திரப்பிரதேசம் மட்டும் தோராயமாக 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மாம்பழங்களை விளைவிக்கிறது.

இந்தியாவில் அதிகம் மாம்பழம் விளையக்கூடிய மற்ற மாநிலமான  மஹாராஷ்டிரம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில்  விளைச்சல் பாதிக்கு பாதி சரிந்திருக்கிறது. இதனால் மற்ற காய், கனிகளை விட மாம்பழங்களின் விலை அதிகமாக இருக்கிறது. 
 
இந்தியாவின் மாம்பழங்கள் ஐக்கிய அரபு அமீரகம் (61%), இங்கிலாந்து (12%), சவுதி அரேபியா (5%) போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்த வருட மாம்பழ உற்பத்தி குறைந்திருப்பதால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதக மாம்பழ ஏற்றுமதியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ