Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி வெறுங்கையோடு ஷாப்பிங் போகலாம்

டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகளுக்கு பதில் கைகளில் அணிந்துகொள்ளக் கூடிய டிஜிட்டல் டிவைஸ்கள் சந்தைக்கு வரப் போவதாக இந்திய தொழிற்சாலை சம்மேளனம் மற்றும் ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.  

இந்த டிவைஸ்கள் கைகளில் அணிந்து கொள்ளக்கூடிய பேண்டுகளாக தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த பேண்டுகளில் மைக்ரோ சிப்கள் இருக்கும். அந்த சிப்பில் வங்கி மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் இருக்கும். இந்த பேண்டுகளை அணிந்து கொண்டு பேமண்ட் கருவிகளுக்கு அருகில் சென்றாலே ஆட்டோ டெபிட் ஆகும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். 
 
இந்த மாதிரியான கருவிகளை பயன்படுத்தி வணிக பரிவர்த்தனைகளை செய்ய சில குறிப்பிட்ட அரசு துறைகளிடமிருந்து அங்கீகாரங்கள் பெற வேண்டியுள்ளதாக தொழிற்சாலை அதிகாரிகள் சொல்கின்றனர். ஆனால் சில வங்கிகளும், சில கார்ட் நிறுவனங்களும் இணைந்து இது போன்ற சேவைகளை சர்வதேச சந்தைகளில் வழங்கத் தொடங்கி இருக்கிறது என்றும் கூறினார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ