Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெட்ரா பாக்கெட் ஜீஸ் சந்தையை பிடிக்க களம் இறங்குகிறது ஐடிசி

வழக்கமாக இந்தியாவின் கோடை காலத்தை பயன்படுத்தி குளிர்பான  நிறுவனங்கள் கோடி கணக்கில் கல்லா கட்டும் ஆனால் இந்த ஆண்டு கோடை  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு  எளிதில் விட்டுக் கொடுக்காமல், இந்தியாவின் ஐடிசி நிறுவனம் போட்டிக்கு இறங்கி இருக்கிறது.

ஐடிசி நிறுவனம் பி நேச்சுரல் என்கிற பெயரில் ஏழு விதமான பழரசங்களை அறிமுகப்படுத்தி சந்தையை பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. அதில் ஜாமுன் ஜீஸ் என்கிற, முற்றிலும் புதிய ரக ஜீஸை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

 
இந்தியாவில் டாபர் ரியல் மற்றும் ரியல் அக்டிவ் என்கிற பெயரில் பிராண்டட் ஜீஸ்களில் 55% சந்தையை பிடித்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து பெப்சிகோவின் ட்ராபிகானோ 30% சந்தையை வைத்திருக்கிறது.  
 
இதுமாதிரியான ஜீஸ் சந்தை இந்தியாவில் ஆண்டுக்கு 15 - 20% என்கிற அளவில் வளர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி இப்படியே நிலையாக அதிகரிக்கரிப்பதற்கு,  அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஜீஸ் உற்பத்தியாளர்கள் கணித்திருக்கின்றனர்.  
 
ஐடிசி கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் அசைக்க முடியாத பிஸ்கட் நிறுவனமாக கருதப்பட்ட பிரிட்டானியா, பார்லி போன்றவைகளை பின்னுக்குத் தள்ளி இன்று பிஸ்கட் சந்தையின் பெரும்பகுதியை தன் வசம் வைத்திருக்கிறது. இப்படியே ஜீஸ் சந்தையிலும் கால் பதிக்க களம் இறங்கி இருக்கிறது ஐடிசி.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ