Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் நேரம்

ரியல் எஸ்டேட் தொடர்பான கேள்விகளுக்கு தற்போது பதிலளித்து கொண்டிருக்கிறார் தமிழ்நாடு ப்ளாட் & ஹவுஸிங் ப்ரமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மணிசங்கர்.
உங்கள் கேள்விகளை ஃபேஸ்புக் மூலமாகவும் கேட்கலாம்.

 

1. பிலிந்த்  ஏரியா, பில்ட் அப் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா அளவு மற்றும் சரியான சதவிகிதத்தை அபார்ட்மெண்ட்டில் எப்படி கண்டுபிடிப்பது?

பில்ட் அப் ஏரியா (BUILT UP AREA) என்பது வீட்டுனுடைய நீள அகலத்தை கணக்கிட்டு சொல்வது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 20*40=800 சதுர அடி. 
 
சூப்பர் பில்ட் அப் ஏரியா  (SUPER BUILT UP AREA) என்பது அடுக்குமாடி கட்டடத்தில் தரப்படும் வசதிகளுக்கேற்ப கணக்கிடப்படுகிறது. 
 
சென்னையில், பில்ட் அப் ஏரியாவை விட சூப்பர் பில்ட் அப் ஏரியா   குறைந்தபட்சம் 15% அதிகமாக இருக்கிறது.
 
20*40= 800 சதுர அடி
800க்கு 15% என்பது 120 சதுர அடி
 
920 சதுர அடி சூப்பர் பில்ட் அப் ஏரியா
 
கார்பெட் ஏரியா என்பது வீட்டினுள் சுவற்றுக்குள்ளே பயன்படும் ஏரியா 20*40 என்ற கட்டிடத்தில் கார்பெட் ஏரியா (floor area) 60 லிருந்து 70 சதுர அடி குறைய வாய்ப்பிருக்கிறது. அதற்கு மேலும் குறைந்தால் அது பற்றி வரை பட துறை சார்ந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யவும்.
 
2. அடுக்குமாடி வீடு வாங்கும் போது, பில்டரிடமிருந்து என்னென்ன ஆவணங்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்?
வீடு வாங்கும் போது வாங்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு: 
 
1. கட்டிடத்தின் வரைபடம், திட்ட அனுமதி, மற்றும் கட்டிட அனுமதி
 
2. சென்னை மாநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டப்பட்ட ரசீது
 
3. சென்னை மாநகராட்சிக்கு செலுத்திய கட்டிட வளர்ச்சி மற்றும் அதன் தொடர்புடைய கட்டப்பட்ட ரசீது, மற்றும் நிலத்தின் ஆவணங்கள்
 
4. தாய் பத்திரம் அதன் தொடர்புடைய வில்லங்க சான்றிதழ்
 
5. மின்சாரம் மற்றும் குடிநீர் வடிகால் துறை தொடர்பாக பணம் கட்டிய ரசீது. 
 
6. வீட்டின் வரைபடத்தின் தொடர்புடைய வரைபடம் (STRUCTURAL DRAWING)
 
7. BUILDING DRAWING
 
8. ELECTRICAL DRAWING
 
9. கட்டிடத்தின் உறுதி தன்மையை உறுதி செய்யும் தர நிர்ணய சான்றிதழ் (STABILITY CERTIFICATE)
 
10. குடிநீர் மற்றும் வடிகால் துறையின் இணைப்புகள் தெருவின் எந்த முனைகளில் இருந்து எத்தனை அடி கீழே தரப்பட்டுள்ளது என்ற வரைபடம்.
 
11. கட்டிடத்தின் மொத்த பரப்பளவில் கார் நிறுத்தும் (CAR PARKING) ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தரப்பட்டுள்ளது. அதன் அளவு, மற்றும் எண் அதன் வரைபடம்
 
12. வீட்டில் இணைக்கப்பட்டிருக்கும் லிஃப்ட், மோட்டார், சி.சி.டி.வி.கேமரா, சோலார் பவர் ஹீட்டர், அவற்றிற்குரிய பில் மற்றும் வாரண்டி கார்டு பெற்று கொள்ள வேண்டும். இந்த உபகரணங்கள் பழுதானால் சரி செய்ய மெக்கானிக்குகள், மற்றும் சர்வீஸ் சென்டர் தொலைபேசி எண் பெற்று கொள்ள வேண்டும். 

3. ஒரு சாதாரண வீடு கட்ட எத்தனை சென்ட் இடம் தேவை?
 
சென்னையில் சாதாரணமாக வீடு கட்ட 80 சதுர அடி மீட்டர் தேவை.  சதுர அடியில் சொல்வது என்றால் 860 சதுர அடி கட்டாயம் தேவை. மனையை  ஒட்டியுள்ள ரோட்டின் அகலம் 7 மீட்டர் (22 அடி)கட்டாயம் தேவை. இவை இருந்தால் தான் கட்டடத்திற்கு வரைபட அனுமதி கிடைக்கும். 
 

4. ஏற்கெனவே கட்டியுள்ள வீட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

கட்டப்பட்ட வீட்டின் மாநகராட்சி சொத்து வரி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திl கட்டப்பட்ட ரசீதுகளை கேட்டுப் பெற வேண்டும். வீட்டுனுடைய  அஸ்திவார விவரத்தை (Foundation deatils) அந்த கட்டிடத்தின் வெளிபுறமாக தோண்டி உறுதி செய்து கொள்ள வேண்டும்!
 
கட்டடத்தில் முன்பு வசித்தவர் பெயர் மற்றும் அதில் ஏற்பட்ட விபத்துகள், மற்றும் துர்பாக்கியங்கள், நேர்திருந்தால் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்!

5. புறநகர்களில் தவணை முறையில் வீட்டு மனை வாங்குவது பாதுகாப்பானதா?
 
புறநகரில் தவணைமுறையில் வீட்டு மனை வாங்கும் போது முதல் தவணை செலுத்தியவுடன் அதற்குரிய அக்ரிமெண்டு போட வேண்டும்.
 
எத்தனையாவது தவணையில் உங்களின் பெயரில் பத்திரம் ரிஜிஸ்டர் செய்து தருவார்கள் மற்றும் பத்திரத்தின் நுட்ப விஷயங்களை வக்கீலின் மூலம் (LEGAL OPINION) பெற்று கொள்ள வேண்டும்.
தவணை முறையில் மனை தரும் கம்பெனியின் பின் புலத்தை ஆராய்ந்த பிறகே வீட்டு மனை வாங்க வேண்டும்!

6. அரசு வழிகாட்டி மதிப்பை எப்படி தெரிந்துக் கொள்வது?

http://www.tnreginet.net/ என்ற வெப்சைட்- ல் அரசு வழிகாட்டு மதிப்பீட்டைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்!

7. சொத்து வாங்கும் போது எத்தனை வருடங்களுக்கு வில்லங்கம் பார்க்க வேண்டும்?
சொத்து வாங்கும் போது வில்லங்க சான்றிதழ் 30லிருந்து 40 வருடங்கள் கட்டாயமாகும்.
சொத்தின் மூலப் பத்திரங்கள் மிக பழமையானதாக இருந்தால் அதனுடைய பதிவு வருடத்திலிருந்து வில்லங்க சான்று பெற வேண்டும்.
8. தனி வீடு, அடுக்குமாடி வீடுகளில்  ஃபால்ஸ் ஷீலிங் உயரம் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்?
வீட்டில் Fall Ceiling உயரம் கணக்கிடுவதற்கு முன்பே வீட்டின் உள்ளே இருக்க வேண்டிய உயரம் கட்டாயம் 9 அடி ஆகும். காரணம் 6 அடி உயரமுள்ள நபர் கையை நன்றாக உயர்த்தினால் 7 1/4 அடி உயரம் வேண்டும். மேலும் சீலிங் பேன் பாதுகாப்பாக தரையில் இருந்து 8 அடி 6 அங்குலம் மேலே இருக்க வேண்டும். எனவே வீட்டின் உள்ளே Fall Ceiling இருந்தாலும் தரையிலிருந்து 8 அடி 6 அங்குலம் கட்டாயம் இருக்க வேண்டும்.

9. வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள் (டிசிஆர்) என்றால் என்ன?
வளர்ச்சி கட்டுப்பாடு விதிகள் ஒரு நகரம் மற்றும் மாநிலத்தில் வசிக்கும் மக்களுடைய பூகோள புவி அமைப்புக்கு ஏற்றவாறு உருவாக்கபடுபவை. இவை நகரத்தின் மக்கள் தொகை மற்றும் தரை பரப்பளவுக்கு ஏற்ப மக்கள் வசிப்பதற்கு தேவையான காற்று, வெளிச்சம், தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வீடுகளின் அமைப்பு, அறைகளின் அமைப்பு மற்றும் அளவினை குறிப்பிட்டு அதே நேரத்தில் பசுமை கட்டடத்திற்கு உதவியாக உள்ள விதிகளை பற்றி எடுத்து கூறுவது வளர்ச்சி கட்டுப்பாடு விதிகள். இவை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

10.  எனது பில்டர் பிராஜெட்-ஐ ரத்து செய்து உள்ளார். அவர் முன் பணத்தை திரும்ப அளிப்பது பற்றி எதுவும் உறுதியாக சொல்ல மாட்டேன் என்கிறார். நான் யாரிடம் புகார் கொடுப்பது?
உங்களுடைய முன் பணத்தை பில்டர் ப்ராஜெக்ட் ரத்து செய்தவுடன் திருப்பி அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனே செயல்படுத்துங்கள்.
 
அதில் உங்களுடைய முன் பணமும் அதற்குரிய வட்டியையும் தெளிவாக குறிப்பிட்டு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க நீதி மன்றத்தை அணுகலாம்.

11. சென்னை முகலிவாக்கத்தில் நடந்தது போல் என் அடுக்குமாடி குடியிருப்பிலும் நடக்க கூடாது என நினைக்கிறேன்.  அடுக்குமாடி குடியிருப்பு வலிமையாக மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது? 
 
முகலிவாக்கத்தில் ஏற்பட்ட இழப்பு, கட்டடத்தின் ஸ்திரத் தன்மை பற்றி தொழில்நுட்ப அறிவு தெரியாத காரணத்தாலும், அவசர அவசரமாக தளங்களை க்யூரிங் செய்யாமலும், மேலும் கட்டப்பட்ட தளங்களை ஸ்திரத் தன்மை பற்றி ஆராயாமல் கட்டப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு. இது கட்டடத் துறையை மிகவும் பாதித்துவிட்டது.

12. நல்ல பில்டரை எப்படி அடையாளம் காண்பது? கட்டத்தின் தரத்தை அறிந்துக் கொள்ள ஏதாவது எளிய வழி இருக்கிறதா?

 
முதலில் பில்டரின் அடையாளம் அவரால் உருவாக்கப்பட்ட பழைய கட்டங்களில், அவர் செய்து கொடுத்த வசதிகள் மற்றும் விற்பனைக்கு பிறகான சேவைகளை சரிவர செய்திருக்கிறாரா? என்பதை உறுதி செய்த பிறகு பில்டரை அனுகலாம்.
 
பில்டரின் டின் நம்பர், சேவை வரிக்கான எண், பான் கார்ட் எண், வங்கிக் கணக்கு எண் முதலியவை சரி பார்க்கப்பட்ட பின்பு அவர் கட்டும் கட்டடத்தின் அடிப்படையான சொத்து ஆவணங்கள், கட்டட வரைபடம், இதற்கு முன்பு அவர் கட்டிய கட்டடங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா என்பதையும், இனி கட்டப்போகும் கட்டடத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டட வரைபடமும், கட்டப்போகும் கட்டடத்தில் எக்ஸிக்யூஷன் பிளான் இரண்டும் ஒத்துப் போவதாக இருந்தாலே அவர் நல்ல பில்டர் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
 
முதலில் பில்டர் கட்டிய கட்டடத்தில் ஏர் க்ராக் (Air crack) இல்லாமல் கட்டி இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏர் க்ராக் வராமல் கட்டப்பட வேண்டுமானால் கட்டடத்தில் ஒவ்வொரு நிலையும் சில் லெவல் (sil level) லின்டல் லெவல் (lintel level), ரூப் லெவல் (roof level), குறிப்பிட்ட காலத்திற்கு க்யூரிங் செய்யப்பட்ட பிறகு கட்டப்பட வேன்டும். 
 
உதாரணமாக சில் லெவல் கட்டப்பட்டு ஏழு நாட்கள் க்யூரிங் செய்யப்பட்டு, லின்டல் லெவல் கட்டப்பட்டு 10 நாட்கள் க்யூரிங் செய்யப்பட்டு, ரூஃப் லெவல் கட்டடம் உயர்த்தப்பட்டு 7 நாட்கள் க்யூரிங் செய்யப்பட்டு, தளம் போடப்பட வேண்டும்.
 
13. ஃபிளாட் வாங்குவது அல்லது  மனை வாங்கி வீடு கட்டுவது எது பாதுகாப்பானது?  
மனை வாங்கி வீடு கட்டுவதற்கு நல்ல கான்டிராக்டர் அமைய வேண்டும், இல்லாவிடில் மனை வாங்கி வீடு கட்டுவது மிகவும் கடினமான காரியமாகி விடும். ஏனென்றால் தொழில்நுட்ப அறிவு இன்றி தொழிலாளர்களிடமிருந்து வேலை வாங்க முடியாமல் கட்டப்படும் கட்டடம் பாதுகாப்பற்றதாகும்.
மேலும் கட்டப்படும் கட்டடம் பட்ஜட்டுக்குள் கட்டுவது மிக கடினமான காரியமாகிவிடும்.
ஃப்ளாட் வாங்குவது எளிதான ஒன்று. ஆனால் அதை வாங்குவதற்கு முன்பு கவனிக்கப்பட வேண்டிய விஷயஙகள் பின் வருமாறு
1. கட்டிடத்தின் வரைபடம், திட்ட அனுமதி, மற்றும் கட்டிட அனுமதி
2. சென்னை மாநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டப்பட்ட ரசீது
3. சென்னை மாநகராட்சிக்கு செலுத்திய கட்டிட வளர்ச்சி மற்றும் அதன் தொடர்புடைய கட்டப்பட்ட ரசீது, மற்றும் நிலத்தின் ஆவணங்கள்
4. தாய் பத்திரம் அதன் தொடர்புடைய வில்லங்க சான்றிதழ்
5. மின்சாரம் மற்றும் குடிநீர் வடிகால் துறை தொடர்பாக பணம் கட்டிய ரசீது. 
6. வீட்டின் வரைபடத்தின் தொடர்புடைய வரைபடம் (STRUCTURAL DRAWING)
7. BUILDING DRAWING
8. ELECTRICAL DRAWING
9. கட்டிடத்தின் உறுதி தன்மையை உறுதி செய்யும் தர நிர்ணய சான்றிதழ் (STABILITY CERTIFICATE)
10. குடிநீர் மற்றும் வடிகால் துறையின் இணைப்புகள் தெருவின் எந்த முனைகளில் இருந்து எத்தனை அடி கீழே தரப்பட்டுள்ளது என்ற வரைபடம்.
11. கட்டிடத்தின் மொத்த பரப்பளவில் கார் நிறுத்தும் (CAR PARKING) ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தரப்பட்டுள்ளது. அதன் அளவு, மற்றும் எண் அதன் வரைபடம்
12. வீட்டில் இணைக்கப்பட்டிருக்கும் லிஃப்ட், மோட்டார், சி.சி.டி.வி.கேமரா, சோலார் பவர் ஹீட்டர், அவற்றிற்குரிய பில் மற்றும் வாரண்டி கார்டு பெற்று கொள்ள வேண்டும். இந்த உபகரணங்கள் பழுதானால் சரி செய்ய மெக்கானிக்குகள், மற்றும் சர்வீஸ் சென்டர் தொலைபேசி எண் பெற்று கொள்ள வேண்டும்.
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ